For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேம் சேஞ்சரான ரோஜாவை புறக்கணித்த ஜெகன்மோகன் ரெட்டி.. ரோஜாவுக்கு "பெத்த போஸ்ட் உந்தி"

Google Oneindia Tamil News

Recommended Video

    Roja not in ministry | ரோஜாவை புறக்கணித்த ஜெகன்மோகன் ரெட்டி- வீடியோ

    அமராவதி: ஆந்திர அமைச்சரவையில் கேம் சேஞ்சரான நடிகை ரோஜாவுக்கு எந்தவித பதவியும் கொடுக்கப்படவில்லை என்பதால் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவை அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இது ஆந்திர அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திர சட்டசபைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வெற்றி பெற்றது. முதல்முறையாக ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி ஆட்சியை பிடித்தது. ஜெகன் மோகன் முதல்வரானார்.

    ஒய்எஸ்ஆர் கட்சியின் வெற்றிக்கு பெரிதும் துணையாக இருந்தது நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா என கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சிக்கு மாறியவுடனேயே பிரச்சார திட்டங்களை ஜெகனுக்கு வகுத்து கொடுக்கும் அளவுக்கு வளர்ந்தார்.

    இல்லை.. ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவி இல்லை.. சபாநாயகர் பதவிக்கு வாய்ப்பு?இல்லை.. ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவி இல்லை.. சபாநாயகர் பதவிக்கு வாய்ப்பு?

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    கடந்த சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி பிரச்சாரத்தை விட நடிகை ரோஜாவின் பிரச்சாரமே பெரிதும் கைகொடுத்துள்ளது. இவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை போல் இவர் பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    துணை முதல்வர் பதவி

    துணை முதல்வர் பதவி

    இதனால் அமைச்சரவையில் நிச்சயம் ரோஜாவுக்கு இடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆந்திரத்துக்கு 5 துணை முதல்வர்களையும் ஜெகன்மோகன் நியமிப்பதாக அறிவித்தார். இதனால் நிச்சயம் துணை முதல்வர் பதவி ரோஜாவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    புறக்கணிப்பு

    புறக்கணிப்பு

    ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் 25 பேர் மற்றும் 5 துணை முதல்வர்களுக்கான பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார் ஜெகன்மோகன். ஆனால் அந்த பட்டியலில் ரோஜாவின் பெயர் இடம்பெறவில்லை. அதாவது ரோஜாவுக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்படவில்லை, துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்படவில்லை. இதை அறிந்த ரோஜா ஆதரவாளர்கள் ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவை பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர்.

    ரோஜாவுக்கு இடமளிக்க விருப்பம் இல்லை

    ரோஜாவுக்கு இடமளிக்க விருப்பம் இல்லை

    இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி ஜாதி அடிப்படையில் அமைச்சரவையில் இடம் அளித்துள்ளார். அப்படி பார்த்தால் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தாகிவிட்டது. இதனால் அதே சமூகத்தைச் சேர்ந்த ரோஜாவுக்கு இடம் கொடுக்க ஜெகன்மோகன் ரெட்டி விரும்பவில்லை என கூறப்படுகிறது.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    மேலும் ரோஜாவை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சர் பதவி கொடுக்கப்படாததற்கான காரணங்களை அவரிடம் கூறி சமாதானப்படுத்தியதாக தெரிகிறது. நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவிக்கு இணையான ஒரு பதவி கொடுக்கப்படலாம் என தெரிகிறது. இல்லாவிட்டால் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

    English summary
    Jagan Mohan Reddy didnt wish to give Minister post for Roja. Apart from this, she will get good post which is equal to Minister.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X