For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலவச ஆழ்துளை கிணறு.. விவசாயிகளுக்கு ஜெகன் மோகன் ரெட்டி கொடுத்த சூப்பர் பரிசு

Google Oneindia Tamil News

அமராவதி: ஆந்திராவில் விவசாயிகளுக்கு தண்ணீர் கனவு திட்டத்தின் கீழ் இலவச ஆழ்துளை கிணறு அமைத்து தரும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். மொத்தம் 2லட்சம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தர முடிவு செய்துள்ளார். இதற்காக ஒரு தொகுதிக்கு ஒரு ஆழ்துளை கிணறு துளையிடும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் தண்ணீர் கனவு திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைத்து தரப்படும் என்று தேர்தலின் போது முதல்வர் ஜெகன்மோகன் வாக்குறுதி அளித்திருந்தார்.

Jagan Mohan Reddy launched a project to set up a free deep well in andhra

இதன்படி ஆந்திர மாநில முதல்வர் தாடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் தண்ணீர் கனவு (ஜல கலா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார். காணொலி காட்சியில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து விவசாயிகளிடம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இத்திட்டம் தொடர்பாக பேசினார்.

அப்போது, அவர் பேசுகையில், ''விவசாயிகளுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி ஒய்.எஸ்.ஆர் (ஜல கலா) தண்ணீர் கனவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 2 லட்சம் ஆழ்துளை கிணறுகளை ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த திட்டம் ஆந்திராவின் 144 கிராமப்புற தொகுதிகள், 19 நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும்.

இங்க பும்ரா, பும்ரான்னு இந்தியா கண்ட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இருந்தாரே.. எப்போ வருவார்? இங்க பும்ரா, பும்ரான்னு இந்தியா கண்ட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இருந்தாரே.. எப்போ வருவார்?

இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கு ஒரு ஆழ்துளை கிணறு துளையிடும் இயந்திரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஏழை, நடுத்தர விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து தரப்படும். அத்துடன் கிணற்றில் நீர் இறைக்க தேவையான மோட்டாரும் இலவசமாக பொருத்தி தரப்படும். இதற்காக கூடுதலாக ரூ.1600 கோடி அரசு செலவு செய்யும்" என்றார்.
ஆந்திர அரசின் அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Jagan Mohan Reddy. The Chief Minister of Andhra Pradesh has launched a project to set up a free deep well under the Water Dream Project for farmers. Started by He has decided to construct a total of 2 lakh deep wells.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X