For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுன்ட்டரெல்லாம் இல்லை.. 21 நாட்களுக்குள் தூக்கு.. ஜெகன் மோகன் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    நாடு முழுவதும் ஒரே குரல்

    அமராவதி: பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

    ஆந்திரத்தின் இளம் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கானாவில் நடந்த என்கவுன்ட்டர் சரிதான் என தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானாவில் பெண் மருத்துவர் கடந்த மாதம் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் சென்னகேசவலு, முகமது ஆரிப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம்.. பாரதி பிறந்த நாளுக்கு மோடி தமிழில் வாழ்த்து! தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம்.. பாரதி பிறந்த நாளுக்கு மோடி தமிழில் வாழ்த்து!

    கொலை

    கொலை

    இதையடுத்து அவர்களிடம் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட போலீஸார் கொலை எப்படி நடந்தது என்பது குறித்து நடித்து காட்ட சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் தப்பிக்க முயன்றனர்.

    குடுமபத்தினர்

    குடுமபத்தினர்

    போலீஸார் எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் கேட்காததால் அவர்கள் 4 பேரையும் என்கவுன்ட்டர் செய்தனர். இந்த சம்பவம் இந்தியாவை அகம் மகிழ வைத்தது. இதை இறந்த பெண் மருத்துவரின் குடும்பத்தினரும், நிர்பயாவின் குடும்பத்தினரும் வரவேற்றுள்ளனர்.

    7 ஆண்டுகள்

    7 ஆண்டுகள்

    இந்த நிலையில் இதை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நிர்பயா பெயரில் அனைத்து மாநிலங்களிலும் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் 7 ஆண்டுகளாகியும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை.

    சுட்டுக் கொல்லப்பட்டது

    சுட்டுக் கொல்லப்பட்டது

    பாலியல் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்குவதே சரியானது. தெலுங்கானா பெண் மருத்துவர் கொல்லப்பட்டதை அறிந்து ஒரு தந்தையாக நான் மிகவும் வருத்தப்பட்டேன். அந்த குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்தவுடன் சற்று நிம்மதி ஏற்பட்டது.

    தூக்கு தண்டனை

    தூக்கு தண்டனை

    இதை நான் வரவேற்கிறேன். ஆந்திரத்திலும் இது போல சட்டத்தை இயற்ற வேண்டும். பாலியல் குற்றவாளிகள் ஒரு வாரத்துக்குள் விசாரிக்கப்பட்டு 21 நாட்கள் அதாவது 3 வாரங்களுக்குள் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    English summary
    Andhra CM Jagan Mohan Reddy says that Rapists will be interrogated within a week and they will be executed within 21 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X