For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆளுநர் அழைப்பு... வருகிற 30 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்

Google Oneindia Tamil News

ஆந்திரா: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க ஆந்திர ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்துள்ளார்.

30 ஆம் தேதி பிற்பகல் 12.23 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Jaganmohan Reddy Sworn-in as Andhra Chief Minister on 30th

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன் மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் ஆந்திரா தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஆந்திரா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஐதராபாத் சென்று, ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆந்திராவில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இத்துடன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து, ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

English summary
Election Result 2019: Jaganmohan Reddy Sworn-in as Andhra Chief Minister on 30th
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X