For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுத்தேர்வில் மாணவன் பிட் அடிக்க உதவினால் பெற்றோருக்கு சிறை: பீகாரில் அதிரடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் 10ம் வகுப்பு தேர்வில் காப்பியடித்தால் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதமும், பெற்றோர்கள் உதவி செய்தால் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

பீகாரில் சென்ற வருடம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தபோது, தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு பிட் பேப்பர், புத்தகத்தின் ஒரு சில பகுதிகளை கிழித்தும் ஜன்னல் வழியாக தூக்கி எரிந்தனர். இந்த காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Jail for parents, Rs 20,000 fine awaits for cheaters of Bihar school exams

எனவே, இந்த வருடம் 10ம் பொதுத்தேர்வு நடைபெறும் போது பிட் அடிக்கும் மாணவர்களுக்கு ரூ20 ஆயிரம் அபராதமும், உதவி செய்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் பீகார் பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

காப்பியடித்தால் மூன்று வருடங்களுக்கு தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் பீகார் பள்ளி கல்வித்துறை தலைவர் லால்கேஷ்வார் பிரசாத் சிங் எச்சரித்துள்ளார். தேர்வு நடக்கும் அனைத்து மையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
Bihar authorities on Tuesday decided to impose a fine of up to Rs 20,000 on students found using unfair means and punish their guardians as well to curb the menace of mass cheating in exams for class 10 and 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X