For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருப்பு பணத்தில் இனி அரசியல் கட்சிகளை நடத்த முடியாது.. வந்தாச்சு நிதி பத்திரங்கள்.. அரசு அதிரடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான 'தேர்தல் நிதிப் பத்திரங்கள்' தொடர்பான முக்கிய தகவல்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி லோக்சபாவில் தெரிவித்தார்.

தொழிலதிபர்கள் ஆதரவு இல்லாமல் நமது நாட்டில் கட்சி நடத்துவது சாத்தியமில்லாதது. அவர்கள் வழங்கும் நன்கொடைகளை கொண்டே தேர்தல் செலவுகளை ஈடுகட்டுகின்றன கட்சிகள். பிரச்சாரத்திற்கு பணம், வாக்காளர்களுக்கு பணம், தொண்டர்களுக்கு பணம் என பல கோடிகள் புரளும் துறையாக உள்ளது.

இவ்வாறு தொழிலதிபர்களிடம் பணம் பெற்று கட்சி நடத்தினால், அந்த கட்சி ஆட்சிக்கு வரும்போது, தொழிலதிபர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதனால்தான் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் முதலில் பணத்தை தொழிலதிபர்களிடமிருந்து நன்கொடையாக பெறுவதை கட்சிகள் நிறுத்த வேண்டியது அவசியமாகிறது.

பத்திரங்கள் அறிமுகம்

பத்திரங்கள் அறிமுகம்

இந்த நிலையில்தான், மத்திய அரசு தேர்தல் நிதிப் பத்திரங்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, அருண் ஜெட்லி லோக்சபாவில் கூறியதாவது: அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் தொழில் நிறுவனங்களும், தனிநபர்களும் குறிப்பிட்ட சில பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் கிடைக்கும் தேர்தல் நிதிப் பத்திரங்களை வாங்கி, அதன் மூலம் வங்கிகள் வழியாக, வெளிப்படையாக நன்கொடை அளிக்க முடியும். பத்திரத்தில் என்ன தொகை குறிப்பிடப்படுகிறதோ, அந்த தொகை, குறிப்பிட்டுள்ள அரசியல் கட்சியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

குறிப்பிட்ட காலம் மட்டும்

குறிப்பிட்ட காலம் மட்டும்

அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை அளிப்பதை தவிர்க்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதுவும் கூட நினைத்த நேரத்தில் எல்லாம் நிதி கொடுக்க முடியாது. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் தலா 10 நாள்களுக்கு மட்டுமே இந்தப் பத்திரங்கள் கிடைக்கும்.

மதிப்பு தொகை

மதிப்பு தொகை

அதேநேரம், பொதுத் தேர்தல் நடைபெறும் வருடத்தில், மாதத்தில் 30 நாள்களுக்கு இந்த பத்திரங்களை வாங்கிக்கொள்ள முடியும். பத்திரத்தை வாங்கியதும் 15 நாள்களில் பணத்தை செலுத்திவிட வேண்டும். 15 நாட்களுக்கு மட்டும் செல்லுபடியாகும். ரூ.1,000 கட்டணத்தில் பத்திரங்கள் ஆரம்பமாகின்றன. ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி ஆகிய மடங்குகளில் இந்த பத்திரங்கள் கிடைக்கும்.

கருப்பு பணம் வராது

கருப்பு பணம் வராது

வாடிக்கையாளர் விவரங்களை அளித்த பிறகு இந்தப் பத்திரங்களை வாங்க முடியும் என்பது வங்கி விதிமுறை. ஆனால், பத்திரத்தில் வாங்கியவரின் பெயர் இடம்பெறாது என்பதால் ரகசிய காப்பு பற்றி பயப்பட தேவையில்லை என்றார். இதனிடையே, காங்கிரஸ் குழு தலைவரான, மல்லிகார்ஜுன கார்கே, பேசுகையில், நன்கொடை அளிப்பவர்களின் பெயர் இடம்பெறாமல் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வழங்கப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஜெட்லி பதிலளிக்கையில், அதுகுறித்த கவலை காங்கிரசுக்கு வேண்டாம். நன்கொடை அளித்தவரின் வங்கிக் கணக்கில் இந்த விவரங்கள் தவறாமல் இடம் பெறும். எனவே, யாரும் கருப்புப் பணத்தை நன்கொடையை கொடுத்து தப்ப முடியாது என்றார்.

மர்ம பணம்

மர்ம பணம்

அரசியல் கட்சிகளுக்கு பெருமளவில் நன்கொடை கிடைக்கிறது. ஆனால், எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை மர்மமாக இருந்து வந்தது. தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பதால் இந்திய குடிமக்களும், இந்திய நிறுவனங்களும் மட்டுமே பத்திரங்களை வாங்க முடியும். கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்றம் அல்லது சட்ட சபை பொதுத் தேர்தலில் 1 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மட்டுமே பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற முடியும். இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.

English summary
he Union government on Tuesday unveiled the contours of electoral bonds, in an endeavour to clean up political funding.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X