For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாடு ஊக்கப்படுத்தப்படும்: ஜேட்லி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: மக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்த ஊக்கப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

2015-2016ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் மேக் இன் இந்தியா திட்டம், சுத்தமான இந்தியா திட்டம், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

Jaitley plans to boost credit, debit card usage

மேலும் சம்பளதாரர்கள் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. மத்திய அரசின் இலக்ககுள் 75வது சுதந்திர தினத்திற்குள் எட்டபப்படும் என்று ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஏழ்மையை அகற்றுவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே தங்களின் நோக்கம் என்று ஜேட்லி தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் ஏற்கனவே டெபிட் கார்டுகளை பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அவ்வளவாக இல்லை. இந்நிலையில் ஜேட்லி இது குறித்து இன்று அறிவிப்பு வெளியிட்டார்.

அதாவது நாட்டு மக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்த ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அரசின் நேரடி மானியம் வங்கியில் செலுத்தப்படும் நிலையில் ஜேட்லி டெபிட் கார்டு பயன்பாடு பற்றி அறிவித்துள்ளார்.

English summary
FM Arun Jaitely announced that people will be encouraged to use credit and debit cards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X