For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியைப் பற்றி மட்டும் ஜெட்லி கவலைப்பட்டால் போதும் – குர்ஷித் பதிலடி

Google Oneindia Tamil News

டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாஜகவின் மூத்த தலைவரான அருண் ஜெட்லியின் காங்கிரஸ் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.நரேந்திர மோடியைப் பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதும் என்று கூறியுள்ளார்.

"ஜெட்லியால் எப்படி மன்மோகன் சிங் பற்றி கவலைப்பட முடிகிறது? அவர் தன்னுடைய கட்சி பிரதமர் வேட்பாளர் பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதும்" என்று சிஎன்என்க்கு அளித்துள்ள பேட்டியில் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

Jaitley should worry about BJP's PM candidate, not Manmohan: Khurshid

மேலும் அவர், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தேவை இல்லாதவை என்றும் கூறியுள்ளார்."இப்போதே பாஜக மகிழ்ச்சியில் கொண்டாட வேண்டாம்.மே 16 அன்று வரை பொறுத்துதான் ஆக வேண்டும்.இதே போல்தான் 2009 இல் கூட கொண்டாடினார்கள்" என்றும் கூறியுள்ளார்.

ஒருவேளை 16 ஆம் தேதி அன்று காங்கிரஸ்க்கு எதிரான முடிவு வெளியானால் அதனை ஏன் ராகுல் மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒரு வலைதளத்தில் "மன்மோகன் சிங் பற்றிய பார்வை" என்ற கேள்விக்கு குர்ஷித் "கேள்விக்கெல்லாம் அப்பாற்பட்டு அவர் ஒரு திறமையான பொருளாதாரத் துறை அமைச்சர்" என்று கூறியுள்ளார்.மேலும், ஒரு காங்கிரஸ் விளம்பரத்திலும் அவர் மன்மோகன் சிங் பற்றி சிறப்பாக கூறியுள்ளார்.

English summary
External Affairs Minister Salman Khurshid has hit back at senior BJP leader Arun Jaitley for his remarks on Prime Minister Manmohan Singh and the Congress. Khurshid said Jaitley should be more bothered about the BJP's Prime Ministerial candidate Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X