For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசை கலைக்க கோரி உள்துறை அமைச்சருக்கு விலங்குகள் நல வாரிய உறுப்பினர் கடிதம்

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக விலங்குகள் நல வாரியம் புகார் தெரிவித்துள்ளது. ஆகையால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும் அந்த அமைப்பின் உறுப்பினர் ஜெயசிம்ஹ வலியுறுத்தியுள்ளார்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு விலங்குகள் நல வாரிய உறுப்பினர் ஜெயசிம்ஹ கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமே வீதியில் இறங்கி போராடி வருகிறது.

Jallikattu continues in parts of TN despite SC ban, says Animal Welfare member

அத்துடன் தடையை மீறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவோம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி நேற்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் தமிழர் பண்பாட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய உறுப்பினரான ஜெயசிம்ஹ என்பவர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Jallikattu continues to be conducted in parts of Tamil Nadu despite a Supreme Court ban, a member of the Animal Welfare board of India wrote to Union home minister Rajnath Singh.

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு விலங்குகள் நல வாரிய உறுப்பினர் ஜெயசிம்ஹ கடிதம் அனுப்பியுள்ளார்.

English summary
Jallikattu continues to be conducted in parts of Tamil Nadu despite a Supreme Court ban, a member of the Animal Welfare board of India wrote to Union home minister Rajnath Singh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X