For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அரசிதழில் வெளியிடப்பட்டது ஜல்லிக்கட்டு சட்டம்

குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டு மாடு இனங்களை காக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசு தலைவர் ஒப்புதலுடன் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டுக்கு இனி யாரும் தடைவிதிக்க முடியாது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் புரட்சி காரணமாக தமிழக அரசு கடந்த 21ஆம் தேதி அவசரச்சட்டம் கொண்டு வந்தது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வரும் வரை போராட்டம் தொடரும் என இளைஞர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Jallikattu law with the consent of the President published in the Gazette

இதையடுத்து சட்டசபையில் ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் நிரந்தர சட்டமாக்கப்பட்டது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கியூபா அமைப்பு தொடர்ந்த வழக்கு நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜல்லிக்கட்டு விரைவில் அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி குடியரசு தலைவர் ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டு சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த ஏதுவாக இயற்றப்பட்டுள்ளது. நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் சட்டம் திருத்தம் கொண்டுவரப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary
Jallikattu law with the consent of the President published in the Gazette. The law was passed to protect the cow species.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X