For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியை கைது செய்பவர்களுக்கு ரூ.100 கோடி பரிசு: பாக். தலைவர் அறிவிப்பு

By Siva
Google Oneindia Tamil News

காஷ்மீர்: பிரதமர் மோடியை கைது செய்பவர்களுக்கு ரூ.100 கோடி பரிசு அளிக்கப்படும் என பாகிஸ்தானைச் சேர்ந்த ஐமாத் இ இஸ்லாமி கட்சி தலைவர் சிராஜுல் ஹக் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் தலைவர் சிராஜுல் ஹக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை தாக்கிப் பேசினார்.

ஹக் தனது உரையில் கூறியிருப்பதாவது,

பரிசு

பரிசு

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் செய்யது சலாஹுத்தீனை கைது செய்ய உதவி செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்தும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

மோடி

மோடி

மோடி, உங்களிடம் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். உங்களாலோ, உங்களின் ஏஜெண்டுகளாலோ சலாஹுத்தீனை கைது செய்ய முடியாது. சலாஹுத்தீனை கைது செய்பவர்களுக்கு ரூ.50 கோடி பரிசு அறிவித்துள்ளீர்கள். நானும் அறிவிக்கிறேன், மோடியை கைது செய்பவர்களுக்கு ரூ.100 கோடி பரிசு அளிக்கப்படும்.

காஷ்மீர்

காஷ்மீர்

காஷ்மீ்ர் பாகிஸ்தானின் ஒரு பகுதி ஆகும். இந்தியாவுடன் நட்புறவு பாராட்டும் எந்த பாகிஸ்தான் அரசியல் தலைவரும் பாகிஸ்தானுக்கும், காஷ்மீர் மக்களுக்கும் துரோகி ஆவார். இந்துஸ்தானுடன் நட்பு வேண்டும் எனில் இந்துஸ்தான், டெல்லி, மும்பைக்கு சென்றுவிடுங்கள். உங்களுக்கு இஸ்லாமாபாத்தில் இடம் இல்லை.

குஜராத்

குஜராத்

ஜம்மு காஷ்மீர் மற்றும் குஜராத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட காரணமாக இருந்தவர் மோடி. ஜம்மு காஷ்மீரில் இந்தியர்கள் செய்யும் அட்டூழியத்தை பாகிஸ்தான் தலைவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர் என்றார் ஹக்.

English summary
Pakistan political party Jamaat-e-Islami chief Siraj-ul-Haq announced that Rs.100 crore reward will be given to those who arrest PM Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X