For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனக்கு அவனைப் பிடிக்காது.. ரொம்ப வெறுக்கிறேன்... யார் இவர்... ஏன் இந்த துவேஷம்??

Google Oneindia Tamil News

டெல்லி: ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நாயகிகள், சண்டைக் காட்சிகள் ஆகியவற்றைப் போலவே இன்னொரு எதிர்பார்ப்புச் சமாச்சாரம் வில்லன். இந்த முறை ஸ்பெக்ட்ரே படத்தில் வில்லனாக கலக்கப் போவது 2 ஆஸ்கர் விருதுகளை வங்கியவரான கிறிஸ்டோபர் வால்ட்ஸ்.

இவர்தான் டேணியல் கிரேக் நடிப்பில் உருவாகியுள்ள லேட்டஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்ட்ரே படத்தின் வில்லன் ஆவார். எல்லா நடிகர்களையும் போலவே வால்ட்ஸும் ஜேம்ஸ் பாண்ட் பட தாக்கத்தின் கீழ்தான் ஹாலிவுட்டில் வலம் வந்தாராம்.

பாண்ட் படங்களில் நடிப்பது சவாலானது என்று கூறும் வால்ட்ஸுக்கு சீன் கானரி, டேணியல் கிரேக் ஆகியோர்தான் ரொம்பப் பிடித்த பாண்டுகளாம். ஜேம்ஸ் பாண்ட் படங்கள் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள் என்றால் இது நவீன காலத்து புராணம் என்று கூறி அசத்துகிறார் வால்ட்ஸ்.

செம சீன்!

செம சீன்!

மெக்சிகோவில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியின்போது வால்ட்ஸ் பேசுகையில், நான் ரொம்ப இளமையானவன் இல்லை. எனவே சீன் கானரி குறித்து எனக்கு நன்றாக தெரியும். இப்போது எனக்குப் பிடித்த பாண்ட் கிரேக்தான். ஆனால் சீன் கானரியைப் பார்த்து வியந்தவன் நான். இப்போதும் கூட சீன் என்றால் ரொம்பப் பிடிக்கும்.

நவீன புராணம் போல

நவீன புராணம் போல

நவீன காலத்து புராணக் கதைகள் போலத்தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களும். பாண்ட் எங்களைத் தொடர்ந்து வருகிறார். நாங்கள் அவரை பின் தொடர்ந்து செல்கிறோம். எங்களிடையே அவர் வாழ்கிறார். பாண்ட் இல்லாத வாழ்க்கையை எங்களால் நினைத்துப் பார்க்க முடியாது என்றார் வால்ட்ஸ்.

அட 59 வயசாச்சு பாஸ்

அட 59 வயசாச்சு பாஸ்

இந்த வில்லன் நடிகருக்கு வயது 59. இவர்தான் ஸ்பெக்ட்ரே படத்தில் டேணியல் கிரேக்குடன் மோதியுள்ளார். இப்படத்தில் பிரான்ஸ் ஓபர்ஹாசர் என்ற கேரக்டரில் வருகிறார் வால்ட்ஸ்.

செம வில்லன் பாஸ்

செம வில்லன் பாஸ்

சரி யார் உங்களில் பெஸ்ட் பாண்ட் வில்லன் என்று கேட்டால் கொஞ்சமும் யோசிக்காமல்.. "மீ" தான் என்று தன்னைச் சுட்டிக் காட்டி அலறடிக்கிறார். என்னை விட யாருங்க பெஸ்ட்டா நடித்து விடப் போகிறார் என்று கூறி சிரிக்கிறார் வால்ட்ஸ்.

பழைய பங்காளி ரிட்டர்னாமே!

பழைய பங்காளி ரிட்டர்னாமே!

இந்தப் படத்தின் மூலம் பாண்ட் படங்களில் பிரபலமான பரம்பரை வைரியான எர்னஸ்ட் ஸ்டாவ்ரோ புளோபெல்ட் என்ற கேரக்டருக்கு உயிர் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

சரி பாண்ட் பிடிக்குமா...

சரி பாண்ட் பிடிக்குமா...

சரி படத்தில் எப்படி நடித்திருக்கிறார் கிரேக் என்று கேட்டால், எனக்கு அவனைப் பிடிக்காது. ரொம்ப வெறுக்கிறேன். என்னை விட அந்தப் பெண்ணுக்குத்தான் (நாயகி) அவனை ரொம்பப் பிடிக்கும்... ஹாஹாஹாஹா.. அப்படி பிரமாதமாக நடித்திருக்கிறார் பாஸ் இந்த கிரேக் என்று கூறிச் சிரிக்கிறார் வால்ட்ஸ்.

24வது பாண்ட் படம்

24வது பாண்ட் படம்

தற்போது வெளியாக இருப்பது 24வது பாண்ட் படமாகும். டேணியல் கிரேக்குக்கு இது 4வது பாண்ட் படமாகும். இந்தியாவில் இப்படம் நவம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது.

நான்தான் பாண்டி...!

நான்தான் பாண்டி...!

தமிழிலும் இப்படத்தை மொழியாக்கம் செய்து திரையிடுகின்றனர். இது போக ஆங்கில ஒரிஜினல், இந்தி, தெலுங்கிலும் இப்படம் திரைக்கு வருகிறது இந்தியாவில்.

English summary
Double Oscar-winner Christoph Waltz, the new villain in Sam Mendes' upcoming James Bond film "Spectre", believes the longest running franchise is "modern mythology". Waltz, like many others, grew up watching the exploits of 007 spy on the big screen and counts Sean Connery and current Bond, Daniel Craig, among his favourites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X