For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் சக்தி வாய்ந்த விடுதலை புலிகள்.. கொள்ளையடித்தவர்களை கொல்லுங்கள்.. காஷ்மீர் ஆளுநர் பரபர பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    Satya pal malik controversy | ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் பரபர பேச்சு- வீடியோ

    ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்த ஒரு கருத்து நாடு முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "​​காவல்துறையினரை விட்டுவிடுங்கள், காஷ்மீரின் செல்வத்தை கொள்ளையடித்தவர்களைக் கொல்லுங்கள்" என்று தீவிரவாதிகளுக்கு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

    கார்கில் மற்றும் லடாக் சுற்றுலாத் விழாவின் தொடக்க விழாவில் ஆளுநர் மாலிக் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவர் கூறியதாவது:

    துப்பாக்கியுடன் இந்த 'சிறுவர்கள்' எந்த காரணமும் இல்லாமல் தங்கள் சொந்த மக்களைக் கொல்கிறார்கள்.

    8 வழிச்சாலை திட்டம் இன்னும் 2 ஆண்டுகளில் வரும்.. அடித்து சொல்லும் சேலம் பாலாஜி ஹாசன் 8 வழிச்சாலை திட்டம் இன்னும் 2 ஆண்டுகளில் வரும்.. அடித்து சொல்லும் சேலம் பாலாஜி ஹாசன்

    கொள்ளையடித்தவர்கள்

    கொள்ளையடித்தவர்கள்

    இந்த சிறுவர்கள் (தீவிரவாதிகள்) பாதுகாப்பு அதிகாரிகள், சிறப்பு போலீஸ் அதிகாரிகளைக் கொல்கிறார்கள். அவர்களை ஏன் கொல்கிறீர்கள்? உங்கள் நாட்டைக் கொள்ளையடித்தவர்களைக் கொல்லுங்கள்; காஷ்மீரின் முழு செல்வத்தையும் கொள்ளையடித்தவர்களில் யாரையாவது நீங்கள் கொன்றிருக்கிறீர்களா?

    விடுதலை புலிகள்

    விடுதலை புலிகள்

    ஒருமுறை உள்ளே போய்விட்டால் இதிலிருந்து வெளியே வர முடியாது. துப்பாக்கி ஏந்தினால் எதுவும் அடைய முடியாது, ஏனெனில் இந்தியாவில் துப்பாக்கியால் அரசை வளைக்க யாராலும் முடியாது என்பதே வரலாறு. உலகின் சக்திவாய்ந்த 'தீவிரவாத அமைப்பாக' விளங்கிய விடுதலை புலிகள் அமைப்பே முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, நீங்கள் எல்லாவற்றையும் பேச்சுவார்த்தையால் தீர்த்துக் கொள்ளுங்கள்.

    என்கவுண்டர் போதும்

    என்கவுண்டர் போதும்

    இங்கு சுமார் 250 குழந்தைகள் (தீவிரவாதிகள்) மட்டுமே உள்ளனர். அதில், 100-125 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். ஒரு என்கவுண்டரை ஆரம்பித்தால், அவர்கள் முழுக்க அழித்து ஒழிக்க, இரண்டு நாட்கள்தான் ஆகும்.

    வாழும்போதே சொர்க்கம்

    வாழும்போதே சொர்க்கம்

    இப்போது ஆசாத் அல்லது சுயாட்சி பற்றி சொல்லுவதில்லை. ஆனால் நீங்கள் செத்த பிறகு, சொர்க்கத்தைப் பெறுவீர்கள் என்று மவுல்விகளால் அவர்கள் மூளைச் சலவைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நான் வாழும் போது இரண்டு சொர்க்கங்களைப் பற்றி சொல்கிறேன்: ஒன்று காஷ்மீர்; மற்றொன்று ஒரு நல்ல முஸ்லீமாக வாழ்வது. இவை இரண்டும் வாழும்போதே சொர்க்கம் தருபவை. நீங்கள் ஏன் பயனற்ற முறையில் இறந்து கொண்டிருக்கிறீர்கள்?

    காஷ்மீர் நிலைமை மாற்றம்

    காஷ்மீர் நிலைமை மாற்றம்

    காஷ்மீரில் நிலைமை மாறிக்கொண்டு உள்ளது. 30 ஆண்டுகளில் முதல் முறையாக, உள்துறை அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹுரியத் எந்த பந்த் அழைப்பையும் கொடுக்கவில்லை. விரட்டிவிடப்பட்ட, காஷ்மீர் பண்டிட்களை திரும்ப அழைத்து வருவது பற்றி நான் பேசியபோது, ​​ஹுரியத் தலைவரும் அதே கருத்தை கொண்டிருப்பதாகவும் அவர்கள் திரும்பி வர வேண்டும் என்றும் கூறினார். இவ்வாறு ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.

    English summary
    Jammu and Kashmir governor Satya Pal Malik on Sunday asked terrorist, to kill those who have robbed the wealth of Kashmir rather than police guards.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X