For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மைனஸ் 28.6 டிகிரி செல்ஸியஸை தொட்ட குளிர்.. காஷ்மீர், லடாக்கில் வரலாறு காணாத பனி.. ஜில் ஜில்!

ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத அளவிற்கு மிக மோசமான குளிரான வானிலை நிலவி வருகிறது.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத அளவிற்கு மிக மோசமான குளிரான வானிலை நிலவி வருகிறது. லடாக்கில் இருக்கும் டிராஸ் பகுதியில் -28.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது.

வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர்நிலவி வருகிறது.மிக முக்கியமாக டெல்லியில் வெப்பநிலை வெறும் 2.4 டிகிரி செல்ஸியஸ் நிலவி வருகிறது. அதேபோல் இமாச்சலப்பிரதேசம், மணாலி ஆகிய பகுதிகளில் உறை நிலைக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகி உள்ளது.

மிகவும் குறைவாக இமாச்சலில் உள்ள கெய்லாங் பாகுதியில் வெறும் -11.5 டிகிரி செல்ஸியஸ் நிலவியது குறிப்பிடத்தக்கது. இதனால் வடமாநிலங்களை சேர்ந்த மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

லடாக் எப்படி

லடாக் எப்படி

முக்கியமாக லடாக்கில் இருக்கும் டிராஸ் பகுதியில் மிக மோசமான குளிரான வானிலை நிலவி வருகிறது. தற்போது அங்கு -28.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. இந்தியாவிலேயே மிகவும் குளிரான வானிலை இங்குதான் நிலவி வருகிறது. லே பகுதியில் -19.5 டிகிரி செல்ஸியஸ் நிலவி வருகிறது.

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது.. நாகாலாந்தில் 37 ஆண்டுகளுக்கு பிறகு கடும் பனிப்பொழிவுபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது.. நாகாலாந்தில் 37 ஆண்டுகளுக்கு பிறகு கடும் பனிப்பொழிவு

குல்மார்க்

குல்மார்க்

அதேபோல் காஷ்மீரில் குல்மார்க் பகுதியில் -6.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. மேலும் அமர்நாத் யாத்திரை செல்லும் பகுதிகளில் -10.4டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. தெற்கு காஷ்மீர் முழுக்க சராசரியாக -9.5 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது.

தால் ஏரி

தால் ஏரி

இதனால் தற்போது மொத்தமாக தால் ஏரி உறைந்து காணப்படுகிறது. அங்கு உறைந்து காணப்படும் தண்ணீருக்கு மேல் ஏறி மக்கள் விளையாடி வருகிறார்கள். அந்த அளவிற்கு மொத்தமாக தால் உறைந்துள்ளது. இதனால் அங்கு மக்கள் தண்ணீருக்கு கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

பிரிவினை

பிரிவினை

ஏற்கனவே காஷ்மீர் பிரிவினை காரணமாக மிக மோசமான பாதிப்பை சந்தித்தது. அங்கு இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. தற்போது இந்த மோசமான வானிலை காரணமாக அங்கு இன்னும் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

English summary
Jammu Kashmir and Ladakh temperature reached a very low point: People struggles with the climate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X