For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கவுன்சில் முதல்கட்ட தேர்தல் - 51.76% வாக்குகள் பதிவு

ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்றது. 51.76 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்றது. காலையில் மந்தமாக வாக்குப்பதிவு நடந்தாலும் மொத்தமாக 51.76 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஆணையர் கேகே சர்மா கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 370 சட்டப்பிரிவு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரும் லடாக்கும் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன..

Jammu Kashmir DDC elections Phase 1 started today

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 234 பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது.

மொத்தம் உள்ள 280 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று காஷ்மீரில் 25 மற்றும் ஜம்முவில் 18 என மொத்தம் 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 296 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 124 பேர் 18 தொகுதிகளில் உள்ள ஜம்முவிலும் மற்ற 172 பேர் 25 தொகுதிகள் உள்ள காஷ்மீரிலும் போட்டியிடுகிறார்கள்.

தேர்தலை முன்னிட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பலத்த பாதுகாப்புகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கைவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை

இந்த தேர்தலுக்காக 2,146 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 296 போட்டியாளர்களில் 89 பேர் பெண்கள். ஜம்மு காஷ்மீரில் உள்ள மொத்தம் 280 தொகுதிகளில் 43 தொகுதிகளில் டிடிசி தேர்தல் நடைபெற்றதாக ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஆணையர் கேகே சர்மா தெரிவித்தார்.

காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. அதன்பின்னர் வாக்காளர் வருகை படிப்படியாக அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 22.12 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பிற்பகலில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த விவரத்தை ஜம்முகாஷ்மீர் தேர்தல் ஆணையர் கேகே சர்மா வெளியிட்டார். அதன்படி, ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 51.76 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில் ஜம்மு பிரிவில் 64.2 சதவிகித வாக்குகளும், காஷ்மீர் பிரிவில் 40.65 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

English summary
Jammu Kashmir DDC elections Phase 1 started today. It will end at December 19. Vote counting on Dec 22.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X