For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர்.. துணை கமிஷனர் அலுவலக வாசலில் கையெறி குண்டு வீச்சு.. 8 பேர் காயம்

Jammu & Kashmir: Grenade attack outside deputy commissioner's office in Anantnag

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் துணை கமிஷனரின் அலுவலக வாயிலில் கையெறி குண்டு வீசியதில் 8 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது கையெறி தாக்குதல், வெடிகுண்டு வீசுதல், துப்பாக்கிச் சண்டை, கலவரம், கல்வீச்சு என பரபரப்பாக இருக்கும். அதிலும் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் பிறகு அது அதிகமாகிவிட்டது.

Jammu & Kashmir: Grenade attack outside deputy commissioners office in Anantnag

இந்த நிலையில் தென் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் துணை ஆணையர் அலுவலகம் உள்ளது. இங்கு பயங்கரவாதிகள் சிலர் கையெறி குண்டுகளை வீசினர்.

இதில் 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவருக்கு மார்பில் காயமேற்பட்டுள்ளதால் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.

இதையடுத்து அந்த பகுதியை ராணுவத்தினர், போலீஸார், சிஆர்பிஎஃப் வீரர்கள் சுற்றி வளைத்தனர். பின்னர் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு பிறகு காஷ்மீரில் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இது.

English summary
8 were injured after militants hurled a grenade attack outside the deputy commissioner's office in Anantnag, Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X