For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிர்ச்சியும் வருத்தமும் தருகிறது.. காஷ்மீர் தலைவர்கள் மீது பாய்ந்த பிஎஸ்ஏ.. ப.சிதம்பரம் கண்டனம்!

ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சர்தாஜ் மதானி உள்ளிட்ட தலைவர்கள் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்து பெரிய அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது, என்று முன்னாள் மத்திய அமைச்சர் மற்

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சர்தாஜ் மதானி உள்ளிட்ட தலைவர்கள் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்து பெரிய அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது, என்று முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் எம்பி ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில்தான் இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டு காவலில் இருக்கிறார்கள்.

Jammu Kashmir: P Chidambaram shocks over the PCA on Omar Abdullah, Mehbooba Mufti

இவர்கள் அங்கு 6 மாதமாக வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சர்தாஜ் மதானி உள்ளிட்ட தலைவர்கள் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. . இதனால் இன்னும் 6 மாதங்களுக்கு இவர்கள் எந்த வித விசாரணையுமின்றி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பார்கள்.

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.. மத்திய அரசு நடவடிக்கை!உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.. மத்திய அரசு நடவடிக்கை!

இதுகுறித்து தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் எம்பி ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் செய்துள்ள டிவிட்டில், ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சர்தாஜ் மதானி உள்ளிட்ட தலைவர்கள் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்து பெரிய அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.

குற்றச்சாட்டுகள் இல்லாமல் ஒருவரை கைது செய்து வீட்டில் வைப்பது ஒரு ஜனநாயகத்தில் மிக மோசமான அருவருப்பான செயல் என்பதை மறக்க வேண்டாம். நீதியற்ற சட்டங்கள் கொண்டு வரப்படும் போதும், நீதியற்ற சட்டங்கள் நடைமுறைபடுத்தப்படும் போதும் மக்களுக்கு போராடுவதை தவிர வேறு என்ன வழி இருக்க முடியும்.

மக்களுக்கு அமைதியாக போராடுவதே ஒரே வழி. போராட்டம் செய்தால் கலவரம் ஏற்படும், பாராளுமன்றத்தில் நிறைவேறிய சட்டங்களை மக்களை மதிக்க வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் அவர் வரலாற்றை மறந்துவிட்டார். மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங். நெல்சன் மண்டேலா ஆகியோரின் போராட்ட வரலாறை மறந்துவிட்டார்.

நீதியற்ற சட்டங்களை அமைதியான போராட்டம் மூலமும், ஒத்துழையாமை இயக்கம் மூலமும் எதிர்க்க வேண்டும். அதுதான் சத்தியாகிரகம் என்று ப. சிதம்பரம் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Jammu Kashmir: P Chidambaram shocks over the PCA on Omar Abdullah, Mehbooba Mufti today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X