For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே நேரத்தில் நுழைய முயன்ற பாக். ராணுவமும், விமானப்படையும்.. இந்தியா அதிரடியான பதில் தாக்குதல்!

இந்திய வான்வெளி எல்லைக்குள் நுழைய பாகிஸ்தான் போர் விமானங்கள் மீண்டும் முயற்சி செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: இந்திய வான்வெளி எல்லைக்குள் நுழைய பாகிஸ்தான் போர் விமானங்கள் மீண்டும் முயற்சி செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் காலையில் இருந்து நீடித்து வந்த சிறிய அமைதி மீண்டும் கலைந்து இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் வான்வெளி மீண்டும் பதற்றம் அடைய தொடங்கி உள்ளது.

பாகிஸ்தான் ராணுவமும் விமானப்படையும் ஒரே நேரத்தில் இந்திய எல்லையில் அத்து மீறி உள்ளது. இதனால் தற்போது இந்திய ராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

என்ன ஆனது

என்ன ஆனது

இந்திய வான்வெளி எல்லைக்குள் நுழைய பாகிஸ்தான் போர் விமானங்கள் இன்று மீண்டும் முயன்றது. சில நிமிடங்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்தது. காஷ்மீரின் மேந்திரா பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் ஊடுருவ முயற்சி செய்து இருக்கிறது. இது சரியாக காஷ்மீர் - பாகிஸ்தான் எல்லை ஆகும்.

முறியடித்தனர்

முறியடித்தனர்

பாகிஸ்தானின் இரண்டிற்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளே வந்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய போர் விமானங்கள் அங்கு பாதுகாப்பிற்காகவும், பதில் தாக்குதல் நடத்தவும் உடனே வேகமாக வந்தது. அங்கு இந்திய போர் விமானங்கள் திரண்டதால் உடனடியாக பாக். விமானங்கள் திரும்பி சென்றது. இதனால் பெரிய அசம்பாவிதம் முறியடிக்கப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அதேசமயம் கீழே பாகிஸ்தானின் ராணுவமும் இந்தியா மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. சரியாக விமானப்படை உள்ளே வந்த நேரத்தில் தாக்குதல் நடந்துள்ளது. காஷ்மீரின் கிருஷ்ணகாதி எனப்படும் பூன்ச் அருகே உள்ள கிராமத்தில் நடந்தது.

காலை

காலை

இன்று காலையும் இதே இடத்தில்தான் பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தியது. இதையடுத்து தற்போது இந்திய ராணுவமும் அவர்கள் மீது பதில் தாக்குதல் நிகழ்த்தி உள்ளது. சுமார் 30 நிமிடம் தாக்குதல் நீடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Jammu And Kashmir: Pakistan Jets tried to cross LoC again, India Beats back them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X