For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Awantipora attack: காஷ்மீர் தாக்குதல்.. 2 நாட்கள் முன்பே வீடியோ வெளியிட்டு எச்சரித்த உள்ளூர் போலீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்... 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலி- வீடியோ

    ஜம்முகாஷ்மீர்: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு 2 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை வீடியோ வெளியிட்டும் உளவுத்துறையின் அலட்சியத்தால் இந்த மோசமான தாக்குதல் நடந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

    காஷ்மீரில் 44 சிஆர்பிஎப் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பினால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலை ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பினர் அரங்கேற்றி உள்ளனர்.

    Jammu kashmir police shared threats posed by jaish on twitter two days prior to pulwama attack

    புல்வாமா மாவட்டத்தில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு 2 நாட்களுக்கு முன் வீடியோ வெளியிட்டனர். அந்த வீடியோவில், ஆப்கானிஸ்தான் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் நிரம்பிய கார் இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து மாநில குற்றவியல் புலனாய்வுத் துறையானது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கார் மூலம் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று கூறி... இந்த வீடியோவை குற்றவியல் புலனாய்வு துறை உளவுத்துறைக்கு அனுப்பி தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அந்த வீடியோவில் இருந்தது போலவே நேற்று நடைபெற்ற தாக்குதலிலும் பயங்கர வெடிப்பொருட்கள் நிரம்பிய கார் மூலம் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இதனிடையே, தாக்குதல் குறித்த தகவல்கள் உளவுத்துறைக்கு கிடைத்தும், அதனை தடுத்து நிறுத்துவது குறித்த சாத்தியக் கூறுகள் கண்டுபிடிக்கப் பட வில்லை என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றதாகவும், அதில் உளவுத்துறை எச்சரித்தது குறித்து விவாதித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English summary
    Jammu and Kashmir police had shared an intelligence input, uploaded on a private twitter account a couple of days back, with all security agencies in which Pakistan based Jaish e Mohammed had threatened to carry out the suicide attack on security forces.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X