For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜெனிவாவை தலைமையிடமாக கொண்ட மனித உரிமை ஆணைகள் ஜம்மு -காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடந்ததாக கோபத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாகவும் இந்த அறிக்கை அளித்தவர்களுடன் இனி எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டோம் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் செயல்படும் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகளுடன் இணைந்து , ஐக்கிய நாடுகள் சபையில் முன்னாள் சிறப்பு புகார் அதிகாரியான ஜோன் இ மென்சாஸ் ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாக குற்றம்சாட்டி அறிக்கை சமர்பித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் சமர்பிக்கப்பட்ட 560 பக்கம் உள்ள இந்த அறிக்கையில் "இந்தியாவின் ஆளுகையில் உள்ள ஜம்மு காஷ்மீரில் 2016 முதல் 2018ம் ஆண்டுக்கு இடையே 433 மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது.

அப்பாவிகள் சித்ரவதை

அப்பாவிகள் சித்ரவதை

பாதுகாப்பு படையினர் பலர் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 27 பேரிடம் மட்டுமே ஜம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. பாதுகாப்பு படையினரின் 70 சதவீத துன்புறுத்தல்கள் ஜம்மு- காஷ்மீரின் அப்பாவி பொதுமக்கள் மீது நடந்திருக்கிறது.

இந்தியா மீது புகார்

இந்தியா மீது புகார்

இதில் 11 சதவீதம் பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் சில தண்ணீர் பீய்ச்சி அடிப்பது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவையும் நடந்துள்ளது. 4 குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் இந்த அறிக்கையே மற்ற நாடுகளைப்போல் இந்தியாவின் மற்ற சிவில் அமைப்புகள் எப்படி இருக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம்" என கூறப்பட்டுள்ளது.

ஐநா குழு புகார்

ஐநா குழு புகார்

இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு புகார் அதிகாரிகளை காஷ்மீருக்குள் அனுமதிக்குமாறு 36 முறை கோரிக்கை வைக்கப்பட்டும் இந்தியா இந்த கோரிக்கை குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தியா நிராகரிப்பு

இந்தியா நிராகரிப்பு

இதனிடையே கடந்த மார்ச் மாதம் 3 சிறப்பு அதிகாரிகள் காஷ்மீரில் மனித உரிமைகள் நடந்தது பற்றி இந்தியாவுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. இதற்கு இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் அளித்துள்ள பதிலில், இந்த அறிக்கை என்பது தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தின் பேரில் எழுதப்பபட்டுள்ளது. பாரபட்சமான இந்த அறிக்கையை ஏற்க முடியாது. இந்த அறிக்கை அளித்தவர்களுடன் எந்த தகவல் தொடர்பையும் வைத்துக்கொள்ள இந்தியா விரும்பவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிக்கை மனித உரிமை ஆணையர் அல் ஹல் ஹுசைனின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் தயாரான அறிக்கை என்றும் குற்றம்சாட்டி உள்ளது.

English summary
India says no longer entertain any communication with UN panel after Jammu & Kashmir report
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X