For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் கல்வீச்சு, வன்முறை.. பாகிஸ்தான், ஐஎஸ்ஐஎஸ் கொடிகள் காட்டப்பட்டதால் பரபரப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினரை நோக்கி மக்களில் ஒரு பிரிவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கொடிகள் காண்பிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

காஷ்மீரில் இன்று பக்ரீத் கொண்டாடப்படுகிறது. தலைநகர் ஸ்ரீநகரில் தொழுகையின்போது ஒரு பிரிவினர் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

Jammu & Kashmir: Violence in Srinagar

அனந்த்நாக் என்ற பகுதியிலும் இதுபோன்ற சம்பவங்கல் நடந்துள்ளன. தாக்குதல் நடைபெற்றபோது, பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் கொடிகளையும் சிலர் ஆட்டி காண்பித்துள்ளனர்.

சமூக விரோதிகள், இரு சமூகங்கள் இடையில் பிரிவினையை ஏற்படுத்த வழி செய்யும் என்று கூறி, ஜம்மு காஷ்மீரில் இன்று இணையதள சேவை முடக்கப்பட்டிருந்தது. மேலும், அங்கு மாட்டிறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்துதான் இப்போராட்டம் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Violence in Srinagar's Eidgah area, security forces fire tear gas shells to disperse protesters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X