For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜால் பேச்சு.. ஆபாச படங்கள்.. நித்தியானந்தா திறந்த வாட்ஸ் ஆப் குரூப்.. 12 சிறுமிகள் இருந்தாங்களாம்!

நித்யானந்தா மீது ஜனார்த்தன ஷர்மா பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    வாட்ஸ் குரூப்பில் நித்யானந்தா இதான் பேசுவார்... சர்மா சொன்ன ரகசியம் |

    அகமதாபாத்: " நித்தியானந்தா ஒரு வாட்ஸ் ஆப் குரூப் வைத்திருந்தார். அதில் எனது இரு மகள்கள் உள்பட 12 சிறுமியர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் ஆபாசமாக பேசுவார் நித்தியானந்தா" என்று கூறியுள்ளார் ஜனார்த்தன் சர்மா.

    இந்த ஜனார்த்தனன் சர்மாவின் இரு மகள்களை மீட்கக் கோரித்தான் சமீபத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்தே குஜராத்தில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் ரெய்டு நடத்தப்பட்டு பின்னர் அது இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

    janardhana sharma complaints on nithiyandas whatsapp group

    இந்த நிலையில் நித்தியானந்தாவின் லீலைகள் குறித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளார் ஜனார்த்தன் சர்மா. இதுதொடர்பாக குஜராத் கோர்ட்டில் ஒரு அபிடவிட்டை அவர் தாக்கல் செய்துள்ளார். அதில் பல தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.

    "எனது மகள்களை என்னிடம் ஒப்படைக்க விடாமல் தடுத்தது கலோரெக்ஸ் பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் மஞ்சுளா பூஜா மற்றும் யுவா அன்ஸ்டாப்பபிள் அமைப்பின் நிறுவனர் அமிதாப் ஷா ஆகியோர்தான்.

    நித்தியானந்தா தனது ஆசிரமத்தில் உள்ள பெண்களை, சிறுமிகளை ருத்ரகன்யா என பெயரிட்டு அழைத்தார். அவர்களை வைத்து நிதி வசூலில் ஈடுபட்டார். தவறாகப் பயன்படுத்தினார். நிதி வசூலுக்காக எந்த அளவுக்கும் இவர்களை இறங்கிப் போக வைத்தார்.

    இரவு நேரங்களில் தான் தங்கியிருக்கும் அறைக்கு இப்பெண்களை வரவழைப்பார் நித்தியானந்தா. ஆன்மீகம் என்ற பெயரில் அடாத செயல்களில் அவர்களுடன் ஈடுபடுவார்.

    வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றையும் அவர் வைத்திருந்தார். அதில் எனது இரு மகள்கள் உள்பட 12 பெண்கள், சிறுமிகள் இடம் பெற்றிருந்தனர். அந்தப் பெண்களை நிர்வாணப் படங்களை அனுப்புமாறு கட்டாயப்படுத்துவார் நித்தியானந்தா. அவர்களுடன் ஆபாசமாகவும் பேசுவார் என்று சர்மா கூறியுள்ளார்.

    English summary
    "samiyar nithiyanda exploited girls and he is running porn whatsapp group" says janardhana sharma
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X