For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரகசிய அரசாங்கம் நடத்துகிறார் ஜெகன்...பவன் கல்யான் ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ரகசிய அரசாங்கம் நடத்துகிறார் ஜெகன் மோகன்: பவன் கல்யான் ஆவேசம் | Pawan kalyan

    அமராவதி: ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துவிட்ட நிலையில், அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டதாக ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யான் தெரிவித்துள்ளார்.

    ஆந்திராவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையோடு வெற்றிபெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் அவரது அதிரடியான நடவடிக்கைகள் மூலம் அண்டை மாநில அரசியவாதிகளின் கவனத்தை பெற்றார்.

    janasena party cheif pawan kalyan slams jagan mohan reddy

    பல கோடி ரூபாய் அரசு செலவில் கட்டப்பட்ட குடியிருப்பை இடித்தது, கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், இடுகாடு சுற்றுச்சுவர்களுக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கொடி வண்ணத்தை பூசியது, உள்ளிட்டவைகள் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள். இந்நிலையில், இன்று ஆந்திர அரசின் 100 நாள் செயல்பாடு குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யான், ஜெகன் மோகன் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

    பொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்பொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்

    அப்போது அவர் பேசியதாவது; ஜெகனின் நடவடிக்கைகளை, செயல்பாடுகளை கவனித்து வந்தேன். போதிய நேரமும், காலமும் அளித்தும் ஜெகன் அரசு எதையும் உருப்படியாக செய்யவில்லை. தேர்தலுக்கு முன்பு ஜெகன் மோகன் ரெட்டி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இப்போது அவர் இழந்துவிட்டார். கல்வி, விவசாயம், என அனைத்து துறைகளிலும் வளர்ச்சிப்பணிகள் நடந்திருக்கிறதா என்றால், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது

    அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை தேவை. நிதி தொடர்பான விவரங்களை ஆந்திர அரசு தனது இணையதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. ரகசியமான முறையில் அரசாணைகளை பிறப்பிக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. இதுவரை எனக்குத்தெரிந்து 60 அரசாணைகள் ரகசிய முறையில் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    அரசு நிர்வாகத்தை பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டியது பொதுமக்களின் அடிப்படை உரிமை.

    English summary
    janasena party cheif pawan kalyan slams jagan mohan reddy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X