For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்.. குஜராத்தில் பாஜக வெற்றி.. ஜார்கண்டில் காங்கிரஸ் வெற்றி!

குஜராத் மாநிலம் ஜஸ்டான் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் மாநிலம் ஜஸ்டான் தொகுதி மற்றும் ஜார்கண்ட் மாநிலம் கொலேபிரா தொகுதி ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. குஜராத் ஜஸ்டான் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

மாறாக ஜார்கண்ட் கொலேபிரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தின் ராஜ்கோட் அருகே ஜஸ்டான் மற்றும் ஜார்கண்ட்டில் உள்ள கொலேபிரா சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இங்கு நடந்து முடிந்த இடைத்தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக மாறியுள்ளது.

 கட்சி மாற்றம்

கட்சி மாற்றம்

குஜராத்தின் ஜஸ்டான் தொகுதியில் கடந்த வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குன்வாராஜித் பாவாலியா போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் அவர் கடந்த ஜூலை மாதம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவிற்கு சென்றார்.இந்த தொகுதி காலியானதான் காரணமாக அங்கு இடைத்தேர்தல் நடந்தது.

 ஜார்கண்ட் தேர்தல் ஏன்

ஜார்கண்ட் தேர்தல் ஏன்

அதேபோல் ஜார்கண்ட்டில் உள்ள கொலேபிரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜார்கண்ட் கட்சியை சேர்ந்த ஈனாஸ் எக்கா, கொலை வழக்கில் கைதாகி சிறை சென்றார்.இதனால் இவரது எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து இங்கு தற்போது இடைத்தேர்தல் நடந்தது. இங்கு காங்கிரஸ், பாஜக, ஜார்கண்ட் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த 20ம் தேதி அங்கு இடைதேர்தல் நடந்தது.

 குஜராத் வலுவான வேட்பாளர்

குஜராத் வலுவான வேட்பாளர்

குஜராத்தின் ஜஸ்டான் தொகுதியில் பாஜக, காங்கிரசில் இருந்து கட்சி மாறிய குன்வாராஜித் பாவாலியாவை அந்த தொகுதியில் தனது வேட்பாளராக நிறுத்தியது. காங்கிரஸ் கட்சி அவ்சார் நகியா என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. குன்வாராஜித் பாவாலியா அங்கு 4 முறை தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 வாக்கு எத்தனை

வாக்கு எத்தனை

ஜஸ்டான் தொகுதியில் நடந்த தேர்தலில் மொத்தம் 72 சதவிகித வாக்குகள் பதிவானது. அங்கு சவுராஷ்டிரா மக்கள் அதிகம் இருக்கிறார்கள். அங்கு மொத்தம் 2.05 லட்சம் பேர் வாக்களித்தனர். அதேபோல் ஜார்கண்ட்டில் உள்ள கொலேபிரா தொகுதியில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.

 பாஜக வெற்றி

பாஜக வெற்றி

குஜராத் ஜஸ்டான் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அவ்சார் நகியா தோல்வியை சந்தித்துள்ளார். பாஜகவின் குன்வாராஜித் பாவாலியா 19,985 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஜார்கண்ட்

ஜார்கண்ட்

ஜார்கண்ட் கொலேபிரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரசின் விக்சால் கொங்காடி 9658 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளரும், ஜார்கண்ட் கட்சி வேட்பாளரும் தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.

English summary
Jasdan bypoll result: Congress and BJP watching closing the new T-20 election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X