For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. வழக்கில் பவானிசிங் நியமனம் தவறுதான்.. ஆனாலும் மறுவிசாரணை தேவை இல்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது தவறுதான்... ஆனாலும் மறுவிசாரணை தேவை இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் பெஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது.

அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் லோகூர், பானுமதி ஆகியோர் இருவேறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர்.

Jaya appeal: Prosecutor appointment wrong, but case won't be reheard, observes SC

அத்துடன் 3 நீதிபதிகள் பெஞ்சுக்கு பரிந்துரைத்தனர். இந்த 3 நீதிபதிகள் பெஞ்ச் நேற்று முதல் விசாரணை நடத்தியது. இன்றும் 2வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.

இன்றைய விசாரணையின் போது 3 நீதிபதிகள் பெஞ்ச் தெரிவித்த கருத்துகள்:

  • அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது தவறானது... அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜராக அவருக்கு அதிகாரம் இல்லை.. சட்டப்படி மோசமானது..
  • தமிழக அரசுக்கு அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் இல்லை.
  • அதே நேரத்தில் இது நடைமுறைகளில் ஏற்பட்ட தவறுகள்தான்...இதனால் மேல்முறையீட்டு வழக்கில் மறுவிசாரணை என்பதும் தேவை இல்லை.
  • அன்பழகன் தரப்பு தங்களது புதிய வாதங்களை எழுத்துப்பூர்வமாக வரும் திங்கள்கிழமையன்று தாக்கல் செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.. ஏற்கெனவே அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த வாதங்களையும் கர்நாடகா உயர்நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டு பரிசீலிக்க வேண்டும்.
  • இதேபோல் குற்றவாளிகள் தரப்பும் தங்களது தரப்பு வாதத்ங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
  • இருதரப்பு தரப்பு வாதங்களை ஆராய்ந்த பின்னர்தான் கர்நாடகா உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் இறுதித் தீர்ப்பளிக்க வேண்டும்.
  • கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி தீர்ப்பு வழங்குவதற்கு தடை ஏதும் இல்லை.
  • இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் திங்கள்கிழமையன்று (ஏப்ரல் 27) வழங்கப்படும்.

இது தொடர்பாக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூறுகையில், பவானிசிங் நியமனம் தொடர்பாக அன்பழகன் தரப்பு முன்வைத்த வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அத்துடன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தமது தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தை திங்களன்று தாக்கல் செய்ய அன்பழகனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த முந்தைய வாதங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பவானிசிங் நியமனம் தவறானது.. இந்த வழக்கில் வரும் திங்கள்கிழமையன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர் என்றார்.

English summary
A three judge bench of the Supreme Court observed that that there is no need for a fresh hearing on the J Jayalalithaa appeal relating to the disproportionate assets case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X