For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா பதில் வாதம்! வியாழக்கிழமை வெளியாகிறது தீர்ப்பு தேதி?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் இறுதி வாதம் நடந்து வருகிறது. கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே 4 நாட்களும், அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 5 நாட்களும் வாதத்தை முன்வைத்தனர்.

Jayalalitha asset case: Facts have clearly revealed that there is a case of disproportionate assets- B V Acharya

ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் நாகேஸ்வர ராவ் 4 நாட்கள் வாதிட்டார். கடந்த மாதம், 27ம் தேதி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே 4வது நாளாக தனது வாதத்தை முன்வைத்தார். இதை தொடர்நது வழக்கு மே 3ம் தேதிக்கு (இன்றைக்கு) ஒத்திவைக்கப்பட்டது.

இன்று கோர்ட் ஆரம்பித்ததும், சிறிது நேரம், சேகர் நாப்டே வாதம் முன் வைத்தார். இதை தொடர்ந்து, கர்நாடக தரப்பில் வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா பதில் வாதத்தை முன்வைத்தார்.

ஜெயலலிதா தரப்பு வாதம் நிலைக்காது, சொத்து குவிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது என்று ஆச்சாரியா வாதம் முன் வைத்தார். இன்று வாதம் செய்த ஆச்சாரியா நாளையும் தொடருகிறார். வியாழக்கிழமைவரை கர்நாடக தரப்பு தனது பதில் வாதத்தை முன் வைக்கும் என்றும் ஆச்சாரியா கூறியுள்ளார்.

கர்நாடக தரப்பு வாதம் வியாழக்கிழமை முடிவடைந்ததும், தீர்ப்பு தேதியை நீதிபதிகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

60 sec: இன்று கோர்ட் ஆரம்பித்ததும், சிறிது நேரம், சசிகலா சார்பில், வழக்கறிஞர், சேகர் நாப்டே வாதம் முன் வைத்தார். இதை தொடர்ந்து, கர்நாடக தரப்பில் வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா பதில் வாதத்தை முன்வைத்தார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிலைக்காது, சொத்து குவிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது என்று ஆச்சாரியா வாதம் முன் வைத்தார். கர்நாடக தரப்பு வாதம் வியாழக்கிழமை முடிவடைந்ததும், தீர்ப்பு தேதியை நீதிபதிகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

English summary
B V Acharya tells Supreme Court that the arguments advanced by Jayalalithaa cannot be sustained. Facts have clearly revealed that there is a case of disproportionate assets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X