For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாக்குதல் அபாயம் எதிரொலி: நேரடி ஒளிபரப்பு வேன்களை தவிர்த்த சன், கலைஞர் செய்தி சேனல்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பாதுகாப்பு காரணங்களால் சன் டி.வி, கலைஞர் டிவி தொலைக்காட்சி செய்தி சேனல்களின் நேரடி ஒளிபரப்பு வாகனங்கள் பரப்பன அக்ரஹாரா கோர்ட் அருகே கொண்டுவரவில்லை.

ஜெயலலிதா மீதான தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கோர்ட் அமைந்திருக்கும் பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் குவிந்துள்ளனர். இதையடுத்து பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் சன்டிவி, கலைஞர் டிவியின் செய்தி சேனல் நிருபர்கள் அச்சத்துடனேயே உலவி வருகின்றனர்.

Jayalalitha case: Sun and Kalaignar tvs avoid ob vans near court

தீர்ப்பு எப்படி வந்தாலும், தங்கள் மீது தாக்குதல் நடத்த கூடும் என்ற அச்சத்திலுள்ளனர் நிருபர்கள். இதனாலேயே நேரடி ஒளிபரப்பு செய்யும் வாகனங்களை இரு தொலைக்காட்சி சேனல்களும் கொண்டுவரவில்லை. முதுகில் தூக்கிப்போட்டுக்கொள்ளும் வசதியுடைய சிறிய நேரடி ஒளிபரப்பு கருவியை சன்டிவி நிருபர் பயன்படுத்தி வருகிறார்.

அதே நேரம் கலைஞர் டிவி, ஏஜென்சிகளையும், நிருபர்களின் தொலைபேசி தகவல்களையும் பெற்று வருகிறது. இருப்பினும், அதிமுகவினர் சுற்றிலும் நிற்கிறார்களா என்பதை பார்த்துக் கொண்டே செய்து வழங்கிக்கொண்டுள்ளனர்.

English summary
Sun and Kalaignar tvs avoid ob vans near court as Jayalalitha followers expected to attack them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X