For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.மரணம் குறித்து மருத்துவக் குழு அறிக்கை ஓ.பன்னீர் செல்வத்திடம் தான் முதலில் கொடுக்கப்பட்டதாம்!

ஜெயலலிதா மரணம் குறித்த அப்பலோ மருத்துவர்களின் அறிக்கை முதன்முதலில் ஓ.பன்னீர் செல்வத்திடம் கொடுக்கப்பட்டது என இன்று வெளியான ஜெ.யின் மருத்துவ அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

டெல்லி:மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல 'குண்டு'களை வீசி வருகிறார். அவருக்கு 'செக்' வைக்கும் விதமாக இன்று மருத்துவ அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா செப்டம்பர் 22, 2016ஆம் ஆண்டு இரவு 10 மணியளவில் மயக்கமடைந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 74 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு, தேறி வந்த நிலையில் 73ஆவது நாள், கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு,எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு அதுவும் பலனளிக்காத நிலையில் அவர் மரணமடைந்தார்.

(ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்)

Jayalalitha's death report was first given to OPS

தற்போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அதற்கு நீதி விசாரணை வேண்டும் என்று மார்ச் 8ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். அதன்பிறகு, தழக அரசின் சுகாதாரத் துறை செயலர் டெல்லிக்குச் சென்று, எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையைப் பெற்றுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் 6 பக்க அறிக்கையையும், அப்பல்லோ மருத்துவமனையின் 12 பக்க அறிக்கையையும் சேர்த்து, ஒருங்கிணைத்து தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர் 5ஆம் தேதி, ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்படட் எக்மோ சிகிச்சை பலனளிக்காமல் ஜெயலலிதா உயிரிழந்தார்.

ஜெயலலிதா மரணமடைந்தது குறித்த அறிக்கையை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம்தான் கொடுத்துள்ளார்கள் எனவும், அவருடன் சேர்த்து அமைச்சர் விஜய பாஸ்கர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் முன்னாள் தலைமை செயலளார் ஆகியோரிடம் மருத்துவக் குழுவின் முடிவு தெரிவிக்கப்பட்டது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, இந்த அவசர அறிக்கை, ஓ.பன்னீர் செல்வத்தின் குற்ற்சாட்டுக்களையும், உண்ணாவிரதத்தையும் தடுக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

English summary
Jayalalitha's death report which was prepared bu apollo doctors was first given to O.Panneer selvam , said in tamilnadu government. Tamilnadu government released medical report of Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X