For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா உடல் நிலை.. கர்நாடக அரசு பஸ் மீது தாக்குதல்.. தமிழகத்திற்கு பஸ் சேவை நிறுத்தம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஜெயலலிதாவின் உடல் நிலையை தொடர்ந்து, பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பஸ் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. காவிரி பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு எதிராக கர்நாடக அமைப்புகளும், அரசியல்வாதிகளும் மோசமான கருத்துக்களை கூறிவந்த நிலையில், ஜெயலலிதாவின் உடல் நிலை மோசமான தகவல் அதிமுக தொண்டர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jayalalithaa health: KSRTC stops buses to TN

இந்நிலையில், திருவண்ணாமலையில், கர்நாடக அரசு பேருந்து மீது சிலர் கல்வீசி தாக்கியுள்ளனர். ஜெயலலிதா தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை பெற்றுவருவதால், அசம்பாவிதங்களை தவிர்க்க ஐராவதா-வோல்வோ உட்பட கர்நாடக அரசு பேருந்துகளை தமிழகத்திற்கு இயக்காமல் இருக்க கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

கே.எஸ்.ஆர்.டி.சி அமைப்பின் செய்தி தொடர்பாளர் லதா இத்தகவலை 'ஒன்இந்தியாவிடம்' உறுதி செய்தார். இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

English summary
Karnataka State Road Transport Corp temporarily stop bus services to TN after an incident of stone pelting near Tiruvannamalai-Latha, KSRTC PRO.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X