For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா ஜாமீன்.. பரபரப்பு நிமிடங்கள்

By Chakra
Google Oneindia Tamil News

-சென்னை போயஸ்கார்டன் வீட்டை சென்றடைந்தார் ஜெயலலிதா

-போயஸ் தோட்ட இல்ல வாசலில் ஜெயலலிதாவுக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

-22 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் போயஸ் தோட்டம் இல்லத்துக்கு சென்றார் ஜெயலலிதா

-கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவிலில் காரை நிறுத்தி சாமிகும்பிட்டார் ஜெயலலிதா

-ஜெயலலிதாவுக்கு சாலையில் நின்ற படியே பெண் ஆரத்தி

-சாலையெங்கும் அதிமுகவினர் - பலத்த போலீஸ் பாதுகாப்பு

-சென்னை சின்னமலை, ஆளுநர் மாளிகை, காந்தி மண்டபம் வழியாக போயஸ் தோட்டம் செல்கிறார் ஜெ.

-ஜெ. செல்லும் வழியெங்கும் அதிமுகவினர் வெள்ளம் போல் குவிந்து வரவேற்பு

-கட்டிடங்கள் மீது ஏறி நின்றபடியும் ஜெயலலிதாவை வரவேற்ற அதிமுகவினர்

-ஜெ.வின் போயஸ் தோட்டம் வீட்டின் முன்பும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் குவிந்தனர்

-சென்னையில் கொட்டும் மழையில் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு

-தொண்டர்களைப் பார்த்து இரட்டை இலை சின்னம் காண்பித்து கை அசைத்து வரவேற்பை ஏற்றார் ஜெ.

-செப்.27-ந் தேதி சனிக்கிழமையன்று பெங்களூர் புறப்பட்டு சென்றார் ஜெயா

-22 நாள் சிறைவாசத்துக்குப் பின்னர் அக். 18-ந் தேதி சனிக்கிழமையன்று சென்னை திரும்பினார் ஜெயா

-போயஸ் தோட்டம் வீட்டின் முன்பும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் குவிந்தனர்

-சென்னை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் உற்சாக முழக்கம்!

-விமான நிலையம் முதல் போயஸ் தோட்டம் வரை மனித சங்கிலியாக நின்று ஜெ.க்கு வரவேற்பு

-ஜெயா ப்ளஷில் "நாளைய வெற்றியை சரித்திரம் சொல்லும்" பாடலுடன் ஜெ. வரவேற்பு காட்சிகள்

-ஜெயா ப்ளஷ் டிவியில் மீண்டும் ஒலித்தது அம்மா.. அம்மா ..எங்கள் அம்மா பாடல்

-சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் ஜெயலலிதா

-22 நாட்களுக்குப் பின்னர் சென்னை வந்த ஜெ.க்கு உற்சாக வரவேற்பு

-விமானநிலையத்தில் இருந்து போயஸ்கார்டன் வரை பலத்த பாதுகாப்பு

-ஜெயலலிதா சிறையில் இருந்த 22 நாட்களும் சிறப்பாக பாதுகாப்பு அளித்த போலீசாருக்கு நன்றி-பெங்களூர் போலீஸ் கமிஷனர் ரெட்டி

-மீடியாக்கள், தமிழக அதிமுக தொண்டர்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார் பெங்களூர் போலீஸ் கமிஷனர்

-ஜெயலலிதா சிறையில் இருந்த 22 நாட்களும் சிறப்பாக பாதுகாப்பு அளித்த போலீசாருக்கு நன்றி-பெங்களூர் போலீஸ் கமிஷனர் ரெட்டி

-மீடியாக்கள், தமிழக அதிமுக தொண்டர்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார் பெங்களூர் போலீஸ் கமிஷனர்

-பன்னீர் செல்வத்தை பெங்களூரிலேயே விட்டுவிட்டு சசி, இளவரசியுடன் விமானத்தில் சென்னை புறப்பட்ட ஜெ

-பெங்களூரில் இருந்து ஜெயலலிதாவுடன் சென்னை புறப்பட்டது சிறப்பு விமானம்

-சிறையில் இருந்து பெங்களூர் ஏர்போர்ட்டுக்கு ஜெயலலிதா பயணித்த காருக்கு திருஷ்டி கழிப்பு

-ஜெயலலிதா பயணித்த கார் மீது ரோட்டின் இருபுறங்களில் இருந்தும் பூக்களை வீசி தொண்டர்கள் கொண்டாட்டம்

-பூ மழையில் நனைந்தபடி ஜெயலலிதா கார் விமான நிலையம் வந்து சேர்ந்தது

-பெங்களூர் எச்.ஏ.எல் விமான நிலையத்திற்குள் வந்தது ஜெயலலிதா கார்

-சிறிது நேரத்தில் சிறப்பு விமானத்தில் ஜெயலலிதா சென்னை பயணம்

-ஜெயலலிதா கார் செல்வதற்காக பெங்களூர் மடிவாளா பகுதியில் ஆம்புலன்சை நிறுத்தி வைத்த போலீசார்

-ஆம்புலன்சிலிருந்த நோயாளியின் உறவினர்கள் போலீசாரை திட்டி தீர்த்ததால் பரபரப்பு

-ஜெயலலிதாவைக் காண இரண்டு நாட்களுக்கு முன்பே பெங்களூரில் குவிந்த அதிமுகவினர்

-தனி விமானத்தில் 5 மணிக்கு சென்னைக்கு வருகிறார் ஜெயலலிதா

-சென்னையில் ஜெயலலிதாவை வரவேற்க அதிமுகவினர் தயார்...

-போயஸ் கார்டன் வாசலில் கொட்டும் மழையில் தொண்டர்கள் குவிந்தனர்

-தனி விமானத்தில் சென்னை வருகிறார் ஜெயலலிதா... விமானம் தயார் நிலையில் உள்ளது

-விமான நிலைய பாதையில் போக்குவரத்து நிறுத்தம்...

-ஜெயலலிதாவின் கார், பாதுகாப்பு வாகனங்கள் மட்டுமே பயணிக்கின்றன

-ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூவரும் ஒரே காரில் விமான நிலையத்துக்கு பயணம்

-ஹொசாரோடு, பொம்மனஹள்ளி, மடிவாளா, கோரமங்களா அவுட்டர் ரிங் ரோடு வழியாக எச்.ஏ.எல் விமான நிலையம் செல்கிறது ஜெயலலிதா கார்

-சாலையின் இருபுறங்களிலும் நின்ற அதிமுக தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி பயணிக்கிறார் ஜெயலலிதா

-ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூர் சிறையில் இருந்து ஜாமீனில் ரிலீஸ் செய்யப்பட்டனர்

-ஜெயலலிதா, சசிகலா ஒரே காரில் சிறையிலிருந்து வெளியே வந்தனர்

-பெங்களூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் எச்.ஏ.எல் விமான நிலையத்திற்கு கிளம்பினார் ஜெயலலிதா

-சிறைக்கு வெளியே நின்றவர்களை காருக்குள் இருந்து பார்த்து சிரித்தபடி கிளம்பிச் சென்றார்

-ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் ஜாமீனில் ரிலீஸ் செய்ய தேவையான நடைமுறைகள் சிறைக்குள் தொடங்கின

-பரப்பன அக்ரகார சிறையில் இருந்து ஜெயலலிதா இன்னும் சிறிது நேரத்தில் விடுதலையாகிறார்

-பெங்களூர் சிறப்பு கோர்ட் ஆர்டருடன் மத்திய சிறைச்சாலை வளாகத்தை வந்தடைந்தார் கோர்ட் தபால் ஊழியர் வெங்கடேஷ்

-ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் விடுதலைக்கு தேவையான நடைமுறைகள் சிறைக்குள் துவங்கின

-பெங்களூர் மத்திய சிறை வளாகத்தின் வெளியே மூன்றரை மணி நேரமாக காத்திருக்கும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம்

-காலை 11 மணி முதல் பெங்களூர் சிறைக்கு வெளியே கொட்டும் மழையிலும் காத்திருக்கிறார் பன்னீர்செல்வம்

-பன்னீர்செல்வத்துடன் பல அமைச்சர்களும் பெங்களூர் சிறைக்கு வெளியே காத்திருப்பு

-ஜெயலலிதா விடுதலையாகி வெளியே வரவில்லை, இடைக்கால ஜாமீனில்தான் வருகிறார்- சுப்பிரமணியசுவாமி

-ஜெயலலிதா விடுதலையாகி வெளியே வருவதை போல அதிமுகவினர் கொண்டாடுகின்றனர்- சு.சுவாமி

-நன்னடைத்தையோடு இருந்தால்கூட டிசம்பர் 18வரைதான் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன்- சு.சுவாமி

-ஜெ.வை வரவேற்க கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் வரவேற்பு அளிக்க போயஸ்கார்டனில் குவிந்தனர்

-போயஸ்கார்டனில் ஜெ வீட்டு வாசலில் நடிகர் குண்டு கல்யாணம் குத்தாட்டம்

-நடிகை சி.ஆர்.சரஸ்வதி தலைமையில் மகளிர் அணியினர் மழையில் குத்தாட்டம்

-பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் வழங்கும் நடைமுறைகள் முடிவடைந்தன

-நீதிபதியின் உத்தரவு டைப் அடித்து முடிக்கப்பட்டு, தலா ரூ.1 கோடி பாண்ட் பத்திரத்தில் 8 பிணையதாரர்களிடமும் கையெழுத்து வாங்கப்பட்டன

-சிறப்பு நீதிமன்ற உத்தரவுடன் பெங்களூர் மத்திய சிறைக்கு புறப்பட்டார் சிறப்பு நீதிமன்ற ஊழியர் வெங்கடேஷ்

-நீதிமன்ற உத்தரவை பரிசீலித்து சிறையில் இருந்து ஜெ., உள்ளிட்ட நால்வரும் விடுதலையாக உள்ளனர்

-இன்றும் ஒரு மணி நேரத்திற்குள் சிறைக்கு கோர்ட் உத்தரவு சென்றடையும் என எதிர்பார்ப்பு

-சென்னையை தொடர்ந்து பெங்களூரிலும் கன மழை

-பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வெளியே காத்திருந்த முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மழையில் சிக்கினர்

-ஆங்காங்கு உள்ள கட்டிடங்களில் முதல்வர், அமைச்சர்கள் அடைக்கலம்

-ஜெயலலிதாவை எதிர்பார்த்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்

-ஏர்போர்ட் முதல் போயஸ்கார்டன் வீடு வரை மனித சங்கிலியாக நின்று ஜெயலலிதாவுக்கு வரவேற்பு கொடுக்க உள்ளனர் அதிமுகவினர்

-எம கண்டம் முடிந்த பிறகு மதியம் 3.30 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வர ஜெயலலிதா முடிவு

-ஜோதிடர்கள் ஆலோசனையின்பேரில் நல்ல நேரத்தில் வெளியேவர திட்டமிட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தகவல்

-ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியேவிட நீதிபதி குன்ஹா பிறப்பித்த உத்தரவு இன்னும் டைப் அடிக்கப்பட்டு வருகிறது

-டைப் அடித்த உத்தரவு அதிமுக வக்கீல்கள் கைக்கு இன்னும் கிடைக்கவில்லை

-உத்தரவை சிறைக்கு கொண்டு செல்வதில் காலதாதம் தொடர்கிறது

-ரிலீசான பிறகு பெங்களூர் எச்.ஏ.எல் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை செல்ல உள்ள ஜெயலலிதா

-எச்.ஏ.எல் விமான நிலையத்தை சுற்றி 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடையுத்தரவு

-விமான நிலையத்தில் பாதுகாப்புக்காக 350 போலீசார் குவிப்பு

-சிறையிலிருந்து விமான நிலையம் வரையிலான சாலையின் இருபுறங்களிலும் ஜெயலலிதாவை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ள அதிமுகவினர்

-சிறையிலிருந்து ரிலீசானதும் கார் மூலம் விமான நிலையம் சென்று சென்னை கிளம்ப உள்ள ஜெயலலிதா

-ஜெயலலிதா காரில் செல்லும்போது அவர் போகும் வழியில் பிற வாகனங்களுக்கு தடை- பெங்களூர் போலீஸ் கமிஷனர் ரெட்டி

-ஜாமீன் உத்தரவாதம் தந்த 8 பேரும் தலா ரூ1 கோடி சொத்து உள்ளவர்கள்

- ஜெயலலிதா விடுதலை- அதிமுகவினர் கட்டு கட்டாக ருபாய் நோட்டுகளை வாரி இறைந்து கொண்டாட்டம்.

-பிணையங்களை பெற்ற நீதிபதி குன்ஹா ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்ய உத்தரவு

-சசிகலாவுக்கு பெங்களூரை சேர்ந்த லட்சுமிபதி, ராஜு பிணையம் அளித்தனர்

-இளவரசிக்கு ராஜேந்திரன், புகழேந்தி பிணையம் அளிப்பு

-சுதாகரனுக்கு லோகேஷ், பிரகாஷ் ஆகியோர் பிணையம் அளித்துள்ளனர்

-அனைத்து பிணையங்களையும் நீதிபதி குன்ஹா அங்கீகரித்தார்

-ஜெயலலிதாவுக்கு பரத், குணஜோதி ஆகிய இருவர் பிணையம் அளித்தனர்

-ஜெயலலிதா தப்பியோடிவிட்டால் உங்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என்று நீதிபதி குன்ஹா எச்சரிக்கை

-தப்பியோட மாட்டார் என்ற உறுதியுடன் மொத்தம் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பிணையம் அளித்தனர்

-பெங்களூர்: சிறையில் இருந்து விடுதலைக்கு தயாரான சசிகலா, இளவரசி, சுதாகரன்

-ஜெயலலிதாவுக்கு பரத், குணஜோதி ஆகிய இருவர் பிணையம் அளித்தனர்

-ஜெயலலிதா தப்பியோடிவிட்டால் உங்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என்று நீதிபதி குன்ஹா எச்சரிக்கை

-தப்பியோட மாட்டார் என்ற உறுதியுடன் மொத்தம் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பிணையம் அளித்தனர்

-ஜெயலலிதாவை வரவேற்க பெங்களூர் மத்திய சிறைச்சாலை வளாகத்திற்கு வந்தார் பன்னீர்செல்வம்

-எச்.ஏ.எல் விமான நிலையத்தில் வந்திறங்கி கார் மூலம் சிறை வளாகம் வந்தது பன்னீர்செல்வம் டீம்

-பெங்களூர் சிறப்பு நீதிமன்ற அலுவல்கள் ஆரம்பித்தன

-ஜெயலலிதா ஜாமீன் நடைமுறைகளை மேற்பார்வையிட உள்ளார் நீதிபதி குன்ஹா

-ஜெயலலிதா விடுதலைக்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன: ஜெய்சிம்ஹா

-பெங்களூரில் பரப்பன அக்ரஹாராவிலிருந்து 2 கிலோமீட்டருக்கு அப்பால் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் தடுத்து நிறுத்தம்

-அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே சிறை வளாகப் பகுதிக்குள் செல்ல அனுமதி

-அமைச்சர், எம்.எல்.ஏக்கள் 500 மீட்டரில் இருந்து இறங்கி நடந்து செல்ல அனுமதி

-ஜெயலலிதா சென்னை செல்ல தயாராகும் பாதுகாப்பு வாகனங்கள்

-பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட் பணி நேரம் காலை 11 மணிக்கு தொடங்குகிறது

-காலை 10.15 மணிக்கே சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்தார் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா

-கோர்ட் பணி நேரம் ஆரம்பித்ததும் முதல் வேலையாக ஜெயலலிதா ஜாமீன் ஆர்டரை பரிசீலிப்பார் என்று எதிர்பார்ப்பு

-ஜெயலலிதாவை பார்க்க தமிழக அதிமுகவினர் பெங்களூரில் குவிவதால் பதற்றம்

-தமிழக பதிவு எண் கொண்ட கார்களை பெங்களூர் எல்லைக்குள் விடாமல் திருப்பிவிரட்டியடிக்கும் கர்நாடக போலீசார்

-காலையில் இட்லி, பொங்கல் சாப்பிட்டு, நாளிதழ்கள் வாசித்து சென்னை பிரயாணத்துக்கு ரெடியாகியுள்ள ஜெயலலிதா

-ஜெயலலிதா இன்று விடுதலையாகிறார்

-பரப்பன அக்ரஹாரா பகுதியில் ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிப்பு

-பல்லாயிரக்கணக்கான அதிமுகவினர் குவிந்தனர்

-காலை 10.30 மணிக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா ஜாமீன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்குகிறார்

-அதன் பின்னர் நான்கு பேரும் ஜாமீன் பிணை பத்திரங்களை சமர்ப்பிப்பார்கள்

-விடுதலையாகி வெளியே வர பிற்பகல் 2 மணியாகும்

-விடுதலையானதும் எச்.ஏ.எல். விமான நிலையம் சென்று சென்னைக்குப் புறப்படுவார் ஜெயலலிதா

-ஜெயலலிதா ஜாமீன் பத்திரங்கள், சிறை ஆவணங்களில் கையெழுத்துப் போடுவதற்காக சிறப்பு வயர் சேர் வருகை

-சென்னையிலிருந்து பார்ச்சூன் காரில் சேரைக் கொண்டு வந்தனர் கமாண்டோக்கள்

-நான்கு வண்டிகளில் ஜெ.வுக்குப் பாதுகாப்பு அளிக்கும் கமாண்டோக்கள் வருகை

-ஜெ. வை வரவேற்பதற்காக ஓசூர் முதல் பரப்பன அக்ரஹாரா வரை அதிமுகவினர் திரள்கின்றனர்

-ஓசூர் முதல் பரப்பன அக்ரஹாரா வரை போக்குவரத்து ஸ்தம்பிப்பு

English summary
Jayalalithaa release scheduled for today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X