For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகாவில் ஜேடிஎஸ் ஆட்சிக்கு வந்தால் தலித், சிறுபான்மை சமூகத்துக்கு துணை முதல்வர் பதவி: குமாரசாமி

கர்நாடகாவில் ஜேடிஎஸ் ஆட்சிக்கு வந்தால் தலித், சிறுபான்மை சமூகத்துக்கு துணை முதல்வர் பதவி தருவோம் என்கிறார் குமாரசாமி.

By Mathi
Google Oneindia Tamil News

மைசூரு: கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் தலித், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவிகளைத் தருவோம் என அக்கட்சி தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

மைசூருவில் செய்தியாளர்களிடம் குமாரசாமி கூறியதாவது:

மக்களிடம் வாக்கு கேட்க காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தார்மீக உரிமை இல்லை. இத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு மக்கள் வாய்ப்பு தர வேண்டும்.

JD(S) promises a Dalit, minority Dy. CM if voted to power in Karnataka

கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் சித்தராமையா அரசு நிர்வாகத்தை சீர்குலைத்துவிட்டார். சித்தராமையாவே மீண்டும் முதல்வரானாலும் கூட அரசாங்கத்தை அவரால் நடத்த முடியாத நிலைதான் உள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தால் தலித், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவிகளைத் தருவோம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

English summary
JD(S) chief H D Kumaraswamy has said that if the party is voted to power, he would make a Dalit and a minority deputy chief ministers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X