For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபாநாயகர் பதவிக்கு ஓகே... துணை முதல்வர் பதவிக்காக இன்னும் முட்டி மோதும் காங்.. பிடிகொடுக்காத ஜேடிஎஸ்

இரு துணை முதல்வர் பதவி வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைக்கு ஜேடிஎஸ் பச்சைக் கொடி காட்டவில்லை.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    துணை முதல்வர் பதவிக்காக இன்னும் முட்டி மோதும் காங்கிரஸ்

    பெங்களூர்: இரு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வரும் நிலையில் அந்த கோரிக்கைக்கு ஜேடிஎஸ் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து இரு கட்சிகளும் பரிசீலனை செய்து வருகிறது.

    கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகளில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு காங்கிரஸ் -ஜேடிஎஸ் கூட்டணி சார்பில் குமாரசாமி முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

    இந்நிலையில் எந்தெந்த கட்சிக்கு அமைச்சரவையில் எத்தனை இடம் உண்டு என்பது குறித்து பேச்சு எழுந்தபோது அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தங்களுக்கு அமைச்சரவையில் அதிக இடங்களை தர வேண்டும் என கோரியது.

    சபாநாயகர்

    சபாநாயகர்

    இரு துணை முதல்வர் பதவியை ஏற்படுத்தவும் காங்கிரஸ் கோரியது. அதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பரமேஸ்வராவுக்கும் மற்றும் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த சிவசங்கரப்பாவுக்கும் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.

    துணை முதல்வர் யாருக்கு

    துணை முதல்வர் யாருக்கு

    இதுதொடர்பாக குமாரசாமி சோனியா மற்றும் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பதவி பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் அரசை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு கமிட்டியை உருவாக்க இருகட்சிகளும் ஒப்புதல் தெரிவித்தன.

    ஒக்கலிகா சமூகம்

    ஒக்கலிகா சமூகம்

    இந்நிலையில் துணை முதல்வர் பதவியில் ஒன்றை ஒக்கலிக்கா சமூகத்தை சேர்ந்த சிவகுமாருக்கு வழங்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து சிவகுமார் கூறுகையில் கட்சி தலைமை முடிவு என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவேன் என்றார்.

    சபாநாயகர் பதவி ஓகே

    சபாநாயகர் பதவி ஓகே

    சபாநாயகர் பதவியை காங்கிரஸுக்கு கொடுக்க ஜேடிஎஸ் ஒப்புதல் அளித்துவிட்டது. ஆனால் இரு துணை முதல்வர்களை காங்கிரஸ் கட்சிக்கே கொடுப்பது குறித்து யோசனையில் உள்ளது. மேலும் அந்த இரு பதவிகளில் ஒன்றை ஜேடிஎஸ்ஸுக்கு வழங்க வேண்டும் என்று கேட்கப்படுவதால் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    English summary
    The JD(S) is not in favour of having two deputy chief ministers as has been mooted by the Congress. The issue is still under consideration by the two parties and further discussions are expected in this regard.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X