For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்காமல் பாஜக காலை வாரிவிட்டது - ஐக்கிய ஜனதா தளம் பாய்ச்சல்!

By Suganthi
Google Oneindia Tamil News

பாட்னா: மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தள கட்சியினருக்கு இடம் கொடுக்காமல் பாஜக காலை வாரிவிட்டது என அக்கட்சியினர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இன்று மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு 9 பேருக்கு குடியரசு தலைவர் பதவி பிரமாணம் செய்துவைத்தார். அதில் இணையமைச்சர்களாக இருந்த நால்வர், கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும் புதிதாக 9 பேர் அமைச்சரவையில் இணைக்கப்பட்டனர்.

JD(U) party persons severely criticizing Bjp

விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்களுக்கு இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கபப்டட் நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த யாருக்கும் எந்த பதவியும் வழங்கப்படவில்லை.

இதனால் மனம் நொந்த அக்க்கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி வசிஷ்ட நாராயண சிங், பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக இணைந்தது. அப்போது மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்தவர்களுக்கு பதவி வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துத்தனர். ஆனால், தற்போது ஐக்கிய ஜனதா கட்சியைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை.

பாரதிய ஜனதா கட்சி பொய் வாக்குறுதி கொடுத்து காலை வாருவார்கள் என எதிர்பார்க்கவில்லை. பாஜக, பீகாரில் ஆட்சியில் பங்குபெற ஐக்கிய ஜனதா தளத்தின் காலைப் பிடித்தது. இப்போது காலை வாரிவிட்டது என வசிஷ்ட நாராயண சிங் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

அண்மையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனான கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கைகோர்த்தார். மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்காததால் தற்போது லாலு, நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

English summary
Party persons in JD(U) is criticizing Bjp very badly as they did not give berth in cabinet to JD(U) party persons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X