For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகன் முதல்வராகும் வாய்ப்பு நழுவிய நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவ கவுடா சாமி தரிசனம்!

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவ கவுடா நேற்றிரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Google Oneindia Tamil News

திருப்பதி: மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவ கவுடா நேற்றிரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெறும் 37 இடங்களை கைப்பற்றிய மஜத கட்சியை ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. பாஜக ஆட்சியமைப்பதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

JDS leader Deva Gawda visits Thirupati temple

இந்நிலையில் பாஜக நேற்று கர்நாடகாவில் ஆட்சியமைத்தது. கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். பெரும்பான்மை இல்லாததால் பாஜக ஆட்சி தொடருவதில் சிக்கல் நீடிக்கிறது.

இதனிடையே வீடு தேடி வந்த முதல்வர் பதவி கைநழுவி போனதால் அதிர்ச்சியடைந்த மஜத கட்சி தலைவர் தேவ கவுடா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றிரவு சாமி தரிசனம் செய்தார்.

JDS leader Deva Gawda visits Thirupati temple

அவருடன் மகன் குமாரசாமியும் சென்றிருந்தார். கர்நாடக அரசியல் களத்தில் நொடிக்கு நொடி பரபரப்பு நிலவி வரும் நிலையில் தேவகவுடா திருப்பதியில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

English summary
JDS leader Deva Gawda visits Thirupati temple. Kumarasamy lost his chance to become a chief minister of Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X