For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பழம் நழுவி பாலில் விழும் நேரத்தில்... இரு எம்எல்ஏக்களை காணவில்லை... டென்ஷனில் மஜத

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு இருவரை காணவில்லை.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய எடியூரப்பா- வீடியோ

    பெங்களூர்: மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இரு எம்எல்ஏக்கள் வராததால் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கலக்கமடைந்துள்ளது.

    கர்நாடகா தேர்தல் முடிவுகள் யாருக்கும் பெரும்பான்மையை அளிக்காமல் இப்படி இழுபறியில் உள்ளது. ஆளுநர் ஆட்சியமைக்க யாரை அழைப்பார் என்று பாஜகவும், காங்- ஜேடிஎஸ்ஸும் காத்துக் கொண்டிருக்கின்றன.

    இதனிடையே சட்டசபையில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் காலஅவகாசம் கொடுத்துள்ளார்.

    காங்கிரஸ் புகார்

    காங்கிரஸ் புகார்

    பெரும்பான்மைக்கு பாஜகவுக்கு இன்னும் 4 எம்எல்ஏக்கள் தேவை. இதற்காக அக்கட்சி , காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக குஷ்டகி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ புகார் தெரிவித்தார்.

    பாஜகவுக்கு ஆதரவில்லை

    பாஜகவுக்கு ஆதரவில்லை

    கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜக, மஜத எம்எல்ஏக்கள் கூட்டம் தனித்தனியே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜகவுக்கு ஆதரவில்லை, நாங்கள் ஏற்கெனவே பேசியபடி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளோம்.

    கூட்டத்துக்கு வரவில்லை

    கூட்டத்துக்கு வரவில்லை

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக் கட்சி சார்பில் 37 பேர் வென்றுள்ளனர். அவர்களுள் 35 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மீதம் இருவரை காணவில்லை.

    மஜத டென்ஷன்

    மஜத டென்ஷன்

    எம்எல்ஏக்கள் ராஜ வெங்கடப்பா, வெங்கட ராவ் நாத கௌடா ஆகியோரை காணவில்லை. கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத இணைந்து ஆட்சி அமைக்கும் நேரத்தில் இருவரை காணாததால் கட்சி தலைமை கடும் டென்ஷனில் உள்ளது.

    English summary
    JDS MLA are not present in Meeting. Chief gets tensed on hearing this news.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X