For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெருவோரம் அமர்ந்து எளிமையாக உண்டு மகிழும் இந்த மனிதர் யார் தெரியுமா?.. இதை படிங்க.. ஸ்வீட் ஷாக்கிங்!

Google Oneindia Tamil News

ராஞ்சி: தமிழ்நாட்டில் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள பொருளாதார மேதை ஜான் டிரேஸ் தினந்தோறும் சாலையில் ஏழைகளுடன் ஏழையாக அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்க ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயணன், எஸ்தர் டஃப்லோ, ஜான் டிரேஸ் ஆகியோர் அடங்கிய பொருளாதார ஆலோசனை கவுன்சில் நியமிக்கப்பட்டுள்ளது.

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிந்த வழக்குகள் வாபஸ்.. மு.க. ஸ்டாலின் அதிரடி 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிந்த வழக்குகள் வாபஸ்.. மு.க. ஸ்டாலின் அதிரடி

இதில் ஜான் டிரேஸ் குறித்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இவர் பொருளாதார மேதை நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென்னுடன் இணைந்து பொருளாதாரம் குறித்து 12 புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஜாக்குவஸ் டிரைஸ்

ஜாக்குவஸ் டிரைஸ்

இவர் பெல்ஜியம் நாட்டில் 1959 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை ஜாக்குவஸ் டிரைஸும் ஒரு பொருளாதார மேதைதான். ஜான் அவரது 20 ஆவது வயதில் இந்தியாவுக்கு வந்தார். அதாவது 1979 ஆம் ஆண்டு முதல் இவர் இந்தியாவில் வசித்து வருகிறார்.

பிஎச்டி

பிஎச்டி

இவர் 2002 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமையையும் பெற்றுள்ளார். இவர் டெல்லியில் பிஎச்டி படித்தார். கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு சென்று பாடம் எடுத்து வருகிறார். இவர் 150 க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார்.

முயற்சி

முயற்சி

இவரது புத்தகங்களை படித்தால் பொருளாதாரத்தில் ஆர்வம் உள்ளவர்களும் புரிந்து கொள்வர். இவர் சம உரிமை, கல்வி, இந்தியாவில் ஆண்கள், பெண்களுக்கான உரிமை, வறுமை, பெண்களின் பிரச்சினைகள், குழந்தைகளின் ஆரோக்கியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் உள்ளார்.

சைக்கிள்

சைக்கிள்

பல்கலைக்கழகங்களுக்கு சைக்கிளில் சென்றுதான் பாடம் நடத்துவாராம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்திற்கான வரைவு அறிக்கையை தயார் செய்தவர் ஜான் டிரேஸ். இத்தகைய சிறப்புக்குரிய இவர் ஏழைகளுடன் ஏழையாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை கொண்டவராம். டெல்லி ஜந்தர் மந்தரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

மக்கள்

மக்கள்

இந்த போராட்டத்தில் மக்களுடன் மக்களாக ஜான் டிரேஸும் கலந்து கொண்டு அமர்ந்திருந்தாராம். அப்போது குருத்வாராவில் இருந்து காரில் இருந்து போராட்டக்காரர்களுக்கு உணவு பொட்டலங்கள் வந்தன. ஒவ்வொருவருக்காக உணவுகளை கொடுத்துக் கொண்டிருந்த போது இவரை அங்கிருந்த தன்னார்வலர்கள் அடையாளம் கொண்டு கொண்டனர்.

போராட்டம்

போராட்டம்

அவருக்கு எக்ஸ்ட்ரா சப்பாத்தியை வைக்க முயன்றனர். அதற்கு ஜான் டிரேஸ், இங்கு போராட்டம் நடத்தும் மக்கள் அனைவரும் இரு சாப்பாத்திகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். எனக்கும் அதுவே போதும் என்றாராம். இவர் ஏழைகளுடன் உணவு அருந்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.

English summary
Jean Dreze who was appointed as TN Economic Advisory Council uses to eat with poor in roadside.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X