For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தர பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை!

By Karthikeyan
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து வர மாவட்ட நீதிபதி சவுகான் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியம் அரசு ஊழியர்கள், அலுவலகங்களுக்கு ஜீன்ஸ் மற்றும் டிசர்ட் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

 Jeans, T-shirt banned for government employees in UP

மேலும் அலுவலகத்தில் புகை பிடிக்கவும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட நீதிபதி பிறப்பித்துள்ளார்.

மேலும், ஆட்சியர் அலுவலகம் என்பது சாதாரண இடம் இல்லை; அதற்கென உள்ள விதிமுறைகளை ஊழியர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அலுவலகத்துக்கு வரும்போது கண்ணியமான உடைகளை அணிந்து வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஊழியர்கள் இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை மூத்த அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதே சமயம் எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும் என அவர் தனது உத்தரவில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mr N.K.S. Chauhan, the district magistrate of Sambhal district has banned jeans and t-shirts for government employees during working hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X