For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏசு கிறிஸ்து தமிழை தாய் மொழியாக கொண்ட இந்து: ஆர்.எஸ்.எஸ் புத்தகத்தால் சர்ச்சை

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: கிறிஸ்தவர்களின் தெய்வமான ஏசு கிறிஸ்து, பிறப்பால் தமிழர் என்றும், கருப்பு நிறம் கொண்டவர் என்றும், அவர் சிவ பெருமானை தியானித்து சமாதி நிலைக்கு சென்ற ஒரு சித்தர் எனவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான கணேஷ் தாமோதர் சாவர்கர் Christ Parichay என்ற புத்தகத்தில் எழுதியிருந்தார்.

1946ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த புத்தகம் மராத்தி மொழியில் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில் சர்ச்சை வெடித்துள்ளது. சாவர்கர் நேஷனல் மெமோரியல் என்ற அமைப்பு, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களின், கொள்கை, கோட்பாடு, இலங்கியங்களை பாதுகாத்து வருகிறது. இவ்வமைப்புதான், வரும் 26ம் தேதி Christ Parichay புத்தகத்தின் மராத்தி மொழியாக்கத்தை வெளியிட உள்ளது.

இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பல அம்சங்கள் புதிய தகவல்களை தெரிவிப்பதை போல இருப்பினும், கிறிஸ்தவர்கள் இதுவரையில் நம்பிக்கொண்டிருக்கும் தகவல்களுக்கு எதிரானதாக உள்ளது.

ஏசுவின் மொழி தமிழ்

ஏசுவின் மொழி தமிழ்

இந்த புத்தகம் தமிழகத்தோடு ஏசுகிறிஸ்துவுக்கு இருந்த நெருங்கிய தொடர்பை விவரிக்கிறது. புத்தகத்திலுள்ள முக்கிய அம்சங்களை பாருங்கள்: ஏசு கிறிஸ்துவின் நிஜப்பெயர் கேசவ் கிருஷ்ணா. தமிழ்தான் அவரது தாய் மொழி.

கருப்பாக இருப்பார்

கருப்பாக இருப்பார்

ஏசு கிறிஸ்து இயல்பில், தமிழகத்து இந்துக்களை போல கருப்பு நிறம் கொண்டவர். தச்சு தொழில் செய்யும் ஆசாரி குலத்தில் பிறந்தவர். இருப்பினும் அந்த ஜாதி விஸ்வகர்மா பிராமணர் ஜாதி என்றே அழைக்கப்படுகிறது. ஏசுவின் 12வது வயதில் அவருக்கு பூணூல் போடும் சடங்கு நிறைவேற்றப்பட்டது.

சேசப்பன் ஜோசப்பானது

சேசப்பன் ஜோசப்பானது

ஏசு கிறிஸ்துவின் தந்தை பெயர் சேசப்பன். அதுதான் காலப்போக்கில் திரிந்து சேஷப் என்றும், பிறகு, ஜோசப் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. தமிழும், சமஸ்கிருதமும் அக்காலத்தில் உலகின் ஆதி மொழிகளாக இருந்தன.

அரபு நாடுகளில் தமிழ் மொழி

ஜெருசலேம், அரபு நாடுகள் அமைந்துள்ள பகுதிகளில் வசிப்போருக்கு தமிழ் தாய் மொழியாக இருந்தது. இப்போதும்கூட அரபு மொழிகளில் தமிழின் ஆதிக்கம் இருப்பதை உணர முடியும். அப்படித்தான் பாலஸ்தீன் பகுதியில் பிறந்த ஏசுவுக்கும் தமிழ் தாய் மொழியாக இருந்தது. அவர் இந்தியாவுக்கு வந்து யோகா பயின்றிருந்தார்.

இமய மலையில் தியானம்

இமய மலையில் தியானம்

ஏசுவை சிலுவையில் அறைந்த பிறகும், தனது யோகத்திறமையால் உயிரோடு இருந்தார். அவை சக தோழர்கள் மீட்டு, சித்த வைத்திய முறையில், சிலுவை காயங்களை குணப்படுத்தினர். இறுதி காலத்தில், இமயமலை பகுதியில், ஏசு, லிங்க வடிவத்தில் சிவபெருமானை நோக்கி தியானம் செய்து வந்தார்.

ஈஷாநாத் முனிவர்

ஈஷாநாத் முனிவர்

3 வருட கடும் தவத்திற்கு பிறகு ஏசுவுக்கு, சிவபெருமான் காட்சியளித்து முக்தியை அளித்தார். பல்வேறு பகுதிகளி்ல இருந்தும் சாதுக்களும், முனிவர்களும் அங்கு வந்து ஏசுவை தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டனர். ஏசுவை ஈஷாநாத் என்றே முனிவர்கள் அழைத்தனர்.

ஜீவசமாதி

ஜீவசமாதி

ஏசு தனது 49வது வயதில், இந்த ஜட உடலை விட்டுச் செல்ல முடிவு செய்தார். இதன்பிறகு ஆழ்நிலை சமாதி நிலைக்கு சென்று, ஏசு தனது உயிரை துறந்து முக்தியடைந்தார். இப்போதும், காஷ்மீரில் ஈஷாநாத் என்ற பெயரில் அவர் ஜீவமுக்தியடைந்த சமாதி உள்ளது.

இந்து மதத்தின் பிரிவு

இந்து மதத்தின் பிரிவு

கிறிஸ்தவம் என்பது தனி மதம் கிடையாது. இந்து மதத்தின் ஒரு அங்கமே கிறிஸ்தவம். பைபிள் ஏசு கூறிய வார்த்தைகள் கிடையாது. இவ்வாறு அந்த புத்தகம் விவரிக்கிறது. இதற்கு ஆதாரமாக பல நூல்களை எடுத்துக்காட்டுகிறது.

உள்நோக்கம் இல்லை

உள்நோக்கம் இல்லை

இதுகுறித்து, சுதந்திர வீரர் சாவர்கர் தேசிய நினைவகத்தின் செயல் தலைவர் ரஞ்சித் சாவர்கர் கூறுகையில், 70 வருடம் கழித்து புத்தகத்தை பப்ளிஷ் செய்வதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. புத்தகம் குறித்து சர்ச்சை எழும் என எனக்கும் தெரியும். ஆனால், இது புதிது கிடையாது. ஏற்கனவே எழுதியுள்ள புத்தகத்தைதான் மராத்தியில் வெளியிடுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கிறிஸ்தவ அமைப்பு விளக்கம்

கிறிஸ்தவ அமைப்பு விளக்கம்

இதனிடையே மும்பையை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள், புத்தகத்திலுள்ள அம்சங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளன. பாதிரியார் வார்னர் டிசோசா கூறுகையில், கிறிஸ்தவர்கள் மத நம்பிக்கையை இந்த புத்தகம் அசைக்காது என்றும், யூகத்தின் அடிப்படையில் புத்தகம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

English summary
A Mumbai trust is reissuing a book written by Ganesh Damodar Savarkar, brother of Veer Savarkar and one of the 5 founders of the RSS; it claims Jesus was a Tamil Hindu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X