For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யூதர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து.. அதிரடி முடிவெடுத்த மகாராஷ்டிரா அரசு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: யூத இன மக்களுக்கு மகாராஷ்டிரா அரசு சிறுபான்மை அந்தஸ்து வழங்க முடிவு செய்துள்ளது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் இன்று நடைபெற்ற அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி இந்தியாவில் யூதர்கள் எண்ணிக்கை 4650. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 2466 பேர் வசிக்கிறார்கள். ஆந்திரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சொற்ப எண்ணிக்கையில் இவர்கள் வாழ்கிறார்கள்.

Jewish gets minority status in maharashtra

தங்களை சிறுபான்மையினத்தவர்களாக அறிவிக்க வேண்டும் என்பது மகாராஷ்டிர மாநில யூதர்களின் பல்லாண்டு கோரிக்கையாகும். இக்கோரிக்கையை ஏற்று, அமைச்சரவை இன்று இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம், யூத இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கிடைக்கும், திருமணங்களை எளிதாக பதிவு செய்ய முடியும், கல்வி நிறுவனங்களை அவர்கள் துவங்க முடியும்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் யூதர்களை சிறுபான்மையினர் என இதுவரை அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் அதிகார மையங்களில் யூதர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Maharashtra government today approved a proposal to grant minority status to Jews in the state. The decision was taken at a meeting of the state Cabinet, chaired by Chief Minister Devendra Fadnavis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X