For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடமை ஒரு பக்கம்.. தாய்மை ஒரு பக்கம்.. இணையத்தை கலக்கும் அர்ச்சனா போட்டோ

ஜான்சி போலீஸ் ஸ்டேஷனில் கைக்குழந்தையுடன் பணியாற்றுகிறார் பெண் போலீஸ்.

Google Oneindia Tamil News

ஜான்சி: கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நமக்கு தெரியும். கூடவே தாய்மையும் சேர்ந்து கொண்டுள்ளது. அதற்கான சான்றுதான் இந்த புகைப்படம்.

மத்திய பிரதேசத்தில் ஜான்சி என்ற பகுதிக்கு உட்பட ஒரு போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருபவர்தான் அர்ச்சனா. இவருக்கு வயது 30. இவரது கணவர் ஹரியானாவில் ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

6 மாத குழந்தை

6 மாத குழந்தை

இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தற்போது 6 மாதத்தில் பெண் கைக்குழந்தை ஒன்றும் இருக்கிறது. 6 மாதமே என்பதால் வீட்டில் விட்டுச்செல்ல முடியாது என்பதால் தன்னுடனே பணிக்கு அழைத்து வந்துவிடுகிறார்.

காக்கி உடை

காக்கி உடை

தற்போது, அர்ச்சனா தன்னுடைய போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டே அடிக்கடி அருகில் இருக்கும் தன் குழந்தையையும் கவனித்து கொண்டு வருவது போல ஒரு போட்டோ இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது. ஒரு நாற்காலியில் அர்ச்சனா காக்கி உடை சகிதம் அணிந்து உட்கார்ந்திருக்கிறார். கையில் ஒரு பைலை வைத்து கொண்டு வேலை பார்க்கிறார்.

சீனியர் ஆபீசர்

சீனியர் ஆபீசர்

அருகே ஒரு டேபிளில் தன் 6 மாத குழந்தையை டவலால் சுற்றி படுக்க வைத்துள்ளார். குழந்தைக்கு அருகில் ஒரு பால் பாட்டில் இருக்கிறது. அம்மாவை அருகில் பார்த்து கொண்டே அந்த குழந்தை நிம்மதியாக தூங்குகிறது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஆய்வாளர் நவ்நீத் சேக்ரா என்பவர்தான் இந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். இவர் அர்ச்சனாவின் சீனியர் ஆபீசர் ஆவார்.

தாய்மை

அர்ச்சனாவின் இந்த போட்டோவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். கடமை உணர்வும், தாய் உணர்வும் ஒருசேர தெரிகிறது என்பன போன்ற கமெண்ட்கள் குவிய தொடங்கி உள்ளது. எந்த பொறுப்புக்கும், பதவிக்கும், பணிக்கும் போனாலும் கூட தாய்மை என்பது தன் ரத்தத்தில் ஊறியே கிடக்கும் என்பதை பறைசாற்றுவதாக இந்த போட்டோ உள்ளது.

English summary
Jhansi mom cop at work with 6 month old baby in the Police Station
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X