For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மாஸ் லுக்.. அந்த க்யூட் சிரிப்பு வேறு

Google Oneindia Tamil News

Recommended Video

    சாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மாஸ் லுக்..

    ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது கட்ட சட்டசபைத் தேர்தலின்போது, தனது சொந்த ஊரான ராஞ்சியில் மனைவி சாக்ஷியுடன் வந்து ஓட்டுப் போட்டு அசத்தினார் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி.

    ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 12 ஆம் தேதியான இன்று, மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 17 தொகுதிகளுக்கு நடைபெற்றது.

    Jharkhand Assembly Elections: MS Dhoni casts his vote in Ranchi

    மாநிலத் தலைநகர் ராஞ்சி உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றன. மற்ற தொகுதிகளில், மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

    இதில் ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடிக்கு கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வருகை தந்திருந்தார். அவரது சொந்த ஊர் என்பதால் அவருக்கான வாக்குரிமை அந்த நகரத்தில்தான் இருக்கிறது. அத்துடன் அவரது மனைவி சாக்ஷிக்கும் வாக்குரிமை அங்கு உள்ளதால் இருவரும் ஜோடியாக வந்து இருந்தனர்.

    இருவரும் வாக்களித்து விட்டு வெளியே வரும்போது கூடியிருந்த ரசிகர்கள் தோனியை பார்த்து வாழ்த்து கோஷமிட்டனர். அவர்களை தனது டிரேட் மார்க் சிரிப்பால் மகிழ்வித்த தோனி, கையை அசைத்து விட்டு சென்றார்.

    ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை ரிசல்ட் இப்போதைக்கு இல்லை.. ஜனவரிக்கு வழக்கு ஒத்திவைப்புராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை ரிசல்ட் இப்போதைக்கு இல்லை.. ஜனவரிக்கு வழக்கு ஒத்திவைப்பு

    தோனி மற்றும் சாக்ஷி இருவருமே கூலிங் கிளாஸ் அணிந்தபடி வாக்குச் சாவடியில் இருந்து வெளியே வந்தனர். தோனி அணிந்திருந்த டீசர்ட்டில் இரண்டு பெரிய பாக்கெட்டுகள் வித்தியாசமாக இருந்தன. மிகுந்த உற்சாகத்துடன் வாக்குச் சாவடியிலிருந்து தோனி வெளியேறி சென்றதை பார்க்க முடிந்தது.

    English summary
    MS Dhoni casts his vote in Ranchi with his wife Sakshi in ongoing Jharkhand Assembly Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X