For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த குறி ஜார்க்கண்ட்.. தேர்தலுக்காக தயாராகும் பாஜக.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக கட்சி அறிவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக கட்சி அறிவித்து இருக்கிறது.

இந்தியாவில் அடுத்த மாநில சட்டசபை தேர்தலுக்கான பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநில தேர்தல் முடிந்து அங்கு பாஜக - ஜேஜேபி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஆனால் அங்கு இன்னும் அமைச்சரவை அறிவிக்கப்படவில்லை. 17 நாட்கள் ஆகியும் பாஜக அமைச்சரவையை அறிவிக்கவில்லை.

Jharkhand Assembly Polls: BJP announces names of candidates for 52 seats out of 81

அதேபோல் மஹாராஷ்டிராவில் தேர்தல் முடிந்து இன்னும் பாஜக ஆட்சி அமைக்க முடியாமல் இருக்கிறது. சிவசேனா தனக்கு முதல்வர் பதவி கண்டிப்பாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று வருகிறது.

இந்த நிலையில்தான் புதிய வரவாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30-ந் தேதி முதல் டிசம்பர் 19 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. சிறிய மாநிலம் என்றாலும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் இருக்கிறது. அங்கு பெரும்பான்மைக்கு 41 எம்.எல்.ஏக்கள் தேவை. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடந்தது வருகிறது. 37 பாஜக எம்எல்ஏக்கள், 6 ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா எம்எல்ஏக்கள் ஆதரவு மூலம் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது.

தற்போது அடுத்த சட்டசபை தேர்தலுக்கும் பாஜக வேகமாக தயாராகி வருகிறது. ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக கட்சி அறிவித்து இருக்கிறது. 81 தொகுதிகளில் மொத்தம் 52 இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

அம்மாநில முதல்வர் ரகுபார் தாஸ் , ஜாம்ஷெட்பூர் மேற்கு தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். அதேபோல ஜார்கண்ட் பாஜக தலைவர் லட்சுமண் கிலுவா சக்ரதார்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

English summary
Jharkhand Assembly Polls: Bharatiya Janata Party announces names of candidates for 52 seats out of 81.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X