For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜார்க்கண்ட் தேர்தல்- ஜே.எம்.எம்.-காங் கூட்டணி 47 இடங்களில் அபார வெற்றி- பாஜகவுக்கு 25 தொகுதிகள்!

Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம்.-காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணி 47 தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜக 25 இடங்களிம் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்த வந்தது. அங்குள்ள 81 தொகுதிகளுக்கு மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று கடந்த வெள்ளிக்கிழமை முடிந்து திங்கள்கிழமை(இன்று) முடிவுகள் வெளியாகின.

இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக கடுமையாக போராடியது. அது போல் காங்கிரஸும் அங்குள்ள மாநில கட்சிகளுடன் மகாகத்பந்தன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க போட்டியிட்டது.

பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என கூறியது. அதன்படி . காங்கிரஸ் கூட்டணியே அதிக இடங்களில் வென்று 47இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக 25 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.அதன் விவரம்:

Newest First Oldest First
7:23 PM, 17 Jan

ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் 2019: ஜார்கண்டில் அதிகாரத்திற்கு ஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கூட்டணி
8:35 AM, 24 Dec

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது.
6:54 AM, 24 Dec

ஜே.எம்.எம்.-காங் கூட்டணி 47 இடங்களில் வெற்றி- பாஜகவுக்கு 25 தொகுதிகள்: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
8:55 PM, 23 Dec

மக்கள் அலை பாஜகவுக்கு ஆதரவாக இல்லை: ரகுபர் தாஸ்
8:55 PM, 23 Dec

ஆனால் மக்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் மதிக்கிறோம்
8:55 PM, 23 Dec

மக்களின் கனவுகளை நிறைவேற்ற ஹேமந்த் சோரன் செயல்படுவார் என நம்புகிறேன்
8:55 PM, 23 Dec

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின் ரகுபர் தாஸ் பேட்டி
8:08 PM, 23 Dec

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததால் முதல்வர் பதவியை ரகுபர் தாஸ் ராஜினாமா செய்தார்.
8:08 PM, 23 Dec

ரகுபர் தாஸ் ராஜினாமா கடிதத்தை ராஜ்பவன் சென்று ஆளுநர் தரும்படி முர்முவிடம் அளித்தார்.
7:50 PM, 23 Dec

ஜார்க்கண்ட் முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார் ரகுபர் தாஸ். இதற்காக ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளார்.
7:45 PM, 23 Dec

காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளர் ஹேமந்த் சோரன் 2 தொகுதியிலும் வெற்றி
7:45 PM, 23 Dec

ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் டும்கா தொகுதியில், பாஜக வேட்பாளர் அன்ஜுலா முர்முவைவிட 13188 வாக்குகள் ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி
7:45 PM, 23 Dec

பார்கைட் தொகுதியில் 25,740 வாக்குகள் வித்தியாசத்தில் ஹேமந்த் சோரன் வெற்றி
7:02 PM, 23 Dec

ஜார்கண்ட் முதல்வரான பாஜக வேட்பாளர் ரகுபர் தாசை விடவும் 12 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்ற சுயேச்சை சர்யூ ராய்
5:27 PM, 23 Dec

ஜார்க்கண்ட் மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர், நான் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்: ஹேமந்த் சோரன் பேட்டி
4:07 PM, 23 Dec

எதிர்க்கட்சிகள் இணைந்தால் பாஜகவை தோற்கடிக்க முடியும். பாஜக தோற்கடிக்க முடியாத கட்சியில்லை- ப. சிதம்பரம் பேட்டி
4:07 PM, 23 Dec

ஜார்கண்ட்: 49 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை. பெரும்பான்மைக்கு 41 தொகுதிகள் தேவை என்ற நிலையில் அமோக முன்னிலை. பாஜக 22 தொகுதிகளில்தான் முன்னிலை பெற்றுள்ளது.
3:38 PM, 23 Dec

ராஞ்சியில் உள்ள முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் இல்லத்திற்கு சென்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தலைவர் ஹேமந்த் சோரன் ஆலோசனை
2:54 PM, 23 Dec

ஜார்கண்ட் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோகம்: 43 தொகுதிகளில் முன்னிலை
2:54 PM, 23 Dec

பாஜக 27 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது
2:54 PM, 23 Dec

கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 10 தொகுதிகளை இழந்தது பாஜக
11:45 AM, 23 Dec

ஹேமந்த் சோரன்தான் ஜார்கண்ட் முதல்வர்.. ஆர்ஜேடி தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
11:17 AM, 23 Dec

ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி 41, பாஜக 29, ஜேவிஎம் 3, ஏஜேஎஸ்யூ 5 தொகுதிகளில் முன்னிலை
10:38 AM, 23 Dec

ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ்-ஜேஎம்எம் 41, பாஜக 29, ஜேவிஎம் 4 தொகுதிகளில் முன்னிலை
10:32 AM, 23 Dec

ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் முன்னிலை பெற்றது காங்கிரஸ் கூட்டணி
10:14 AM, 23 Dec

ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ்-ஜேஎம்எம் 40, பாஜக 29, ஜேவிஎம் 4 தொகுதிகளில் முன்னிலை
10:09 AM, 23 Dec

காங்கிரஸ்-ஜேஎம்எம் 39, பாஜக 30, ஜேவிஎம் 4 தொகுதிகளில் முன்னிலை
9:58 AM, 23 Dec

ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ்-ஜேஎம்எம் 38, பாஜக 30, ஜேவிஎம் 4 தொகுதிகளில் முன்னிலை
9:50 AM, 23 Dec

ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ்-ஜேஎம்எம் 37, பாஜக 31, ஜேவிஎம் 4 தொகுதிகளில் முன்னிலை
9:42 AM, 23 Dec

ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ்-ஜேஎம்எம் 37, பாஜக 29, ஜேவிஎம் 4 தொகுதிகளில் முன்னிலை
READ MORE

Jharkhand Election Results 2019 Live Updates
English summary
Jharkhand Election Results 2019 Live : Assembly Election results are going to announce today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X