For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜார்கண்டில் ஆட்சியை இழக்கிறது பாஜக: ரிபப்ளிக் டிவி எக்ஸிட் போல்

Google Oneindia Tamil News

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் இன்றும் தொடர்ந்து வெளியாகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 30ம் தேதி துவங்கிய தேர்தல் டிசம்பர் 20ம் தேதிவரை 5 கட்டங்களாக நடைபெற்றது. ஜார்கண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைக்கும் உத்வேகத்துடன், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியை பாஜகவிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் சூறாவளி பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில்தான், தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23ம் தேதி வெளியாகிறது. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, குடியுரிமை சட்டத் திருத்தம், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் போன்ற, நாடு முழுமைக்குமான பற்றி எரியும் தீவிர பிரச்சினைகளுக்கு நடுவே நடைபெற்ற தேர்தல் இது.

எனவே, தேர்தல் முடிவுகள் எந்த மாதிரியாக இருக்கும், என்ற எதிர்பார்ப்பு நாடு முழுக்கவே எழுந்துள்ளது. இந்த நிலையில் 5வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு துவங்கியது. 5 தொகுதிகளில் மதியம் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மற்ற 11 தொகுதிகளில் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 .30 மணிக்கு மேல் பல்வேறு ஏஜென்சிகளின் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின. இன்று ரிபப்ளிக் டிவியின் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

Newest First Oldest First
6:13 PM, 21 Dec

காங்கிரஸ் 10-15 தொகுதிகளை வெல்லும்- ரிபப்ளிக் டிவி எக்ஸிட் போல்
6:13 PM, 21 Dec

பாஜக 22-30 தொகுதிகளை வெல்ல கூடும்- ரிபப்ளிக் டிவி எக்ஸிட் போல் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 23-28 தொகுதிகளை வெல்லும்
6:13 PM, 21 Dec

ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழக்கிறது- ரிபப்ளிக் டிவி எக்ஸிட் போல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும்
9:17 PM, 20 Dec

ஜார்க்கண்ட்: காங்-ஜே.எம்.எம்- ஆர்ஜேடி- 44 இடங்களை கைப்பற்றும் - டைம்ஸ் நவ் எக்ஸிட் போல்
9:17 PM, 20 Dec

பாஜக 28; ஜேவிஎம்- 3; இதர கட்சிகள் 6 இடங்களில் வெல்லும்- டைம்ஸ் நவ்
7:43 PM, 20 Dec

பாஜகவுக்கு 22 முதல் 32 இடங்கள் கிடைக்கலாம்- இந்தியா டுடே எக்ஸிட் போல்
7:42 PM, 20 Dec

காங்.-ஜேஎம்எம்- ஆர்ஜேடி அணி 38 முதல் 50 இடங்களை கைப்பற்றும்- இந்தியா டுடே.
7:28 PM, 20 Dec

காங்கிரஸ் கூட்டணிக்கு 35 தொகுதிகளும், பாஜக கூட்டணிக்கு 32 தொகுதிகளும் கிடைக்கலாம்- சி வோட்டர் கணிப்பு
7:20 PM, 20 Dec

ஜார்கண்ட் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும். காங்கிரஸ் கட்சி அடங்கிய மகாகட்பந்தன் தனிப்பெரும் கூட்டணியாக உருவெடுக்கும்- சி வோட்டர் எக்ஸிட் போல்.
7:15 PM, 20 Dec

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 30 தொகுதிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 2 தொகுதிகள். மகாகட்பந்தன் கூட்டணி மொத்தம் 42 தொகுதிகளை வென்று ஆட்சி அமைக்கும். பாஜக 27 தொகுதிகள், ஏஜேஎஸ்யூ கட்சி 4, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 4 பெறும். பாஜக கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளை கைப்பற்றும் என்று கணிப்பு.
7:05 PM, 20 Dec

டெல்லி: இன்னும் சில நிமிடங்களில் வெளியாகிறது இந்தியா டுடே-ஆக்சிஸ் இந்தியா எக்ஸிட் போல்
6:55 PM, 20 Dec

டெல்லி: ரிபப்ளிக் டிவி சார்பில் ஜன் கி பாத் எக்ஸிட் போல் நாளை காலை வெளியாகும் என அறிவிப்பு
6:37 PM, 20 Dec

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களால் ஜார்கண்ட் எக்சிட் போல் வெளியாவதில் தாமதம்
6:33 PM, 20 Dec

இந்தியா டுடே-ஆக்சிஸ் இந்தியா எக்சிட் போல் 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு
6:27 PM, 20 Dec

டெல்லி: இன்னும் சில நிமிடங்களில் வெளியாகிறது ஜார்கண்ட் எக்சிட் போல்
6:27 PM, 20 Dec

பல முன்னணி ஆங்கில டிவி சேனல்கள் எக்சிட் போல் வெளியிட உள்ளன
12:18 PM, 20 Dec

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் தீவிமடைந்துள்ள நிலையில், மக்கள் எண்ண ஓட்டத்தை தேர்தல் முடிவு பிரதிபலிக்கும்
12:18 PM, 20 Dec

பாஜக பெரும்பான்மையை தக்க வைக்கும் என எக்ஸிட் போல் முடிவுகள் வந்தால், அது குடியுரிமை சட்ட விவகாரத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படும்
12:18 PM, 20 Dec

காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் வந்தாலோ, தொங்கு சட்டசபை அமையும் என்றாலோ அது குடியுரிமை சட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படும்
12:18 PM, 20 Dec

மக்களின் நாடித்துடிப்பை அறிய ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Jharkhand Exit Poll Results 2019: Who will win BJP or Congress?
English summary
Jharkhand Exit Poll Results 2019, opinion poll to be released after voting in Phase 5 of Assembly elections ends today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X