• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறப்புறுப்பில் டம்பளரை.. 50 வயது பெண்ணின் உயிர் ஊசல்.. காமுகர்கள் 4 பேரையும் தட்டி தூக்கிய போலீஸ்!

|

ராஞ்சி: "4 பேர் கொண்ட கும்பல் 50 வயது விதவையை பலாத்காரம் செய்ததுடன், ஒரு எஃகு டம்பளரை எடுத்து அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பிலும் திணித்துவிட்டு சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை.. இதனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் உயிர் ஊசலாடி வருகிறது.. இதனிடையே பெண்ணை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் 4 பேரையுமே ஜார்கண்ட் போலீசார் கைது செய்துவிட்டனர்..!

ஜார்கண்ட் மாநிலம் சாத்ரா மாவட்டத்தில் உள்ள கோப்னா கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த பெண்.. 50 வயதாகிறது.. கணவனை இழந்த விதவை.. அந்த கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்.. கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு, வீட்டிற்கு 4 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர்..

Jharkhand gangrape case widow critical and four arrested

குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டனர்.. அதை கொண்டு வந்து கொடுத்தபோது, 4பேருமே விதவையை பலாத்காரம் செய்துள்ளனர். இறுதியில், ஒரு எஃகு டம்பளரை பெண்ணின் அந்தரங்க உறுப்பிலும் செருகிவிட்டு சென்றுவிட்டனர்.

அந்த பெண் வலி தாங்க முடியாமல் அலறவும் அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து பாரத்தபோது, இடுப்பு பகுதியில் ரத்தம் கசிந்து கொண்டே இருந்திருக்கிறது.. இதையடுத்து, சுகாதார மையத்துக்கு தூக்கி சென்றுள்ளனர்.. ஆனால், அவரது உடல்நிலை ரொம்ப மோசமாக இருந்ததால், பீகார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு சொல்லி உள்ளனர்.

அதன்படியே அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.. அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ந்துபோய்விட்டனர்.. அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், அவருடைய பிறப்புறுப்பில் எஃகு டம்பளர் திணிக்கப்பட்டிருப்பதையும் கண்டனர்.. இதற்கு பிறகுதான் அவரை ஐசியூவில் மாற்றி தீவிர சிகிச்சை தர ஆரம்பித்தனர்.. போலீசாருக்கும் தகவல் சொன்னார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.. அப்போது அவர் சொன்னதாவது: "4 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து, கத்தி முனையில் மிரட்டி பலாத்காரமும் செய்தனர். என்னை விட்டுவிடுமாறு அவர்களிடம் கெஞ்சினேன்.. அவர்கள் கேட்கவில்லை.. சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என்றனர்.

இறுதியில், ஒரு எஃகு டம்பளரை எடுத்து என்னுடைய அந்தரங்க உறுப்பில் திணித்துவிட்டனர்.. நான் வலி தாங்காமல் கத்தி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டேன்" என்றார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை ஆரம்பமானது. பாப்லு பாஸ்வான், பிட்டு பாஸ்வான் உட்பட 3 பேர் கைதாகி இருந்த நிலையில், இன்னொருவர் தலைமறைவானார்.. அவரையும் தேடி வந்த போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. அவரது பிறப்புறுப்பில் இரும்பு கிழித்து ரணங்கள் அதிகமாகி உள்ளதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்... இன்னும் சீரியஸ் கண்டிஷனில்தான் பெண் உள்ளாராம்.. குற்றவாளிகள் 4 பேருமே இதே கிராமத்தை சேர்ந்தவர்கள்.. இந்த பெண்ணின் கணவர் இறந்து 4 வருடங்கள் ஆகிறதாம்.

சகோதரி உதவியுடன் அங்கேயே ஒரு கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.. விதவை பெண் வீட்டில் தனியாக இருப்பதை கண்காணித்து வந்தநிலையில், இறுதியில் இப்படிஒரு கொடுமையை இளைஞர்கள் அரங்கேற்றி உள்ளனர். கைதான 4 பேரிடமும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரத்தின் உச்சம்தான் நிர்பயா வழக்கு.. அதனால்தான் நாடே அன்று அதிர்ந்தது.. இதுபோன்ற வன்முறை கொடுமைகள் குறையும் என்பதால்தான் நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போட்டனர்.. ஆனாலும் காமுகர்கள் அடங்கவே இல்லை.. இவர்களுக்காவது நிர்பயா போல இல்லாமல், உடனடியாக கடும் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பாகும்

English summary
Jharkhand gangrape case widow critical and four arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X