For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி எங்கள் வலியை புரிந்து கொள்ளவில்லை.. ஜார்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

ராஞ்சி: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாளுவதில், பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறை சரியில்லை என்று ஜார்கண்ட் சுகாதாரத் துறை அமைச்சர் பன்னா குப்தா அதிருப்தி வெளிப்படுத்தினார்.

Recommended Video

    விளக்கு ஏற்றுவதன் பின்னணியில் அறிவியல் காரணம் இல்லை

    பிரதமர் மோடியின் அணுகுமுறையால் நான் ஆச்சரியப்பட்டேன் என்று கூறிய பன்னா குப்தா, ஜார்கண்ட் மாநிலத்திற்கு மருத்துவ பொருட்கள், உணவு மற்றும் நிதி பேக்கேஜ் தேவை என்றும் கூறினார்.

    Jharkhand Health Minister criticise PM Narendra Modi

    "இரண்டு வீடியோ கான்பரன்ஸ்கள் நடத்தப்பட்ட போதிலும், ஜார்கண்டின் வலியை பிரதமர் மோடி புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை," என்று அவர் குற்றச்சாட்டு முன் வைத்தார்.

    இன்று பிரதமர் மோடி வெளியிட்ட ஒரு வீடியோவில் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு குடிமக்கள் அனைவரும், மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாடு தனது "ஒற்றுமையின் வலிமையை" காட்ட வேண்டும் என்று அவர் கோரிக்கைவிடுத்தார்.

    கடந்த வியாழக்கிழமை மாநில முதல்வர்களுடனான வீடியோ கான்பரன்சில் பேசிய பிரதமர் மோடி, ஏப்ரல் 14 அன்று "லாக்டவுன் முடிவடைந்தவுடன் மக்கள் மீண்டும் மீண்டும் வெளியே வருவதை தடுப்பதை உறுதி செய்ய ஒரு பொதுவான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று, கேட்டுக் கொண்டார்.

    ஜார்கண்டில், ஜார்கண்ட் முக்கி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Jharkhand Health Minister Banna Gupta expressed dissatisfaction over Prime Minister Narendra Modi's attitude in dealing with the coronavirus infection.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X