For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முஸ்லீம் இளைஞர் அன்ஸாரி மரணம்.. குற்றவாளிகள் மீது கொலை வழக்கை திரும்ப பெற்றது ஜார்கண்ட் போலீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    Jharkhand men | இரவு முழுவதும் இளைஞருக்கு அடி, ஜார்க்கண்டில் கொலை- வீடியோ

    ராஞ்சி: ஜார்கண்ட் முஸ்லீம் இளைஞர் தப்பேஜ் அன்ஸாரி அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது பதிவு செய்திருந்த கொலை வழக்கை ஜார்கண்ட் போலீசார் திரும்ப பெற்றுள்ளனர்.

    ஜார்கண்ட் மாநிலத்தின் சராய்கேலா மாவட்டத்தில் உள்ள கதம்டீஹா கிராமத்தை சேர்ந்தவர் தான் தப்பேஜ் அன்ஸாரி (22 வயது). இவர் ஜம்ஷேபுரில் இருந்து கடந்த ஜுன் மாதம் 17ம் தேதி கத்கி டிஹ என்ற கிராமத்தின் வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரை திருட வந்ததாக நினைத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் கட்டிவைத்து அடித்து உதைத்துள்ளனர்.

    Jharkhand police bring back murder charge on accused of Tabrez Ansari lynching case

    பின்னர் போலீசில் ஒப்படைத்துள்ளனர். இந்த கோர சம்பவத்தில் தப்பேஜ் அன்ஸாரி. உயிரிழந்தார். இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து அன்ஸாரியின் உடலை ஒப்படைக்கும் சமயத்தில் தப்பேஜ் அன்ஸாரி. அடித்து துன்புறுத்தப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் பிரச்சனை பூகம்பமாக வெடித்தது. இதற்கிடையெ அன்ஸாரியை ஜெய் ஸ்ரீராம் சொல்லச்சொல்லி அந்த கும்பலைச் சேர்ந்தோர் அடித்து துன்புறுத்தியதாக அவரது மனைவி குற்றம்சாட்டினார்.

    இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்ததால் அன்ஸாரியை அடித்து துன்புறுத்திய 13 பேர் மீது ஐபிசி 302வது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் ஜார்க்கண்ட் போலீசார்.

    கைது செய்து காருக்குள் கட்டி போட்டால்.. கசமுசா.. ஆடி போன போலீஸ்.. அமெரிக்காவில் ஷாக்!கைது செய்து காருக்குள் கட்டி போட்டால்.. கசமுசா.. ஆடி போன போலீஸ்.. அமெரிக்காவில் ஷாக்!

    ஆனால் இரண்டாவது மருத்துவ பரிசோதனை அறிக்கை அண்மையில் வெளியானது. அந்த அறிக்கையில் தாக்குதல் மற்றும் மாரடைப்பு காரணமாகவே அன்ஸாரி இறந்து போனதாக கூறப்பட்டது. இதையடுத்து ஜார்க்கண்டின் சராய்கேலா கர்ஸாவன் போலீசார் குற்றம்சாட்டப்பட்ட 13 பேர் மீது பதிந்து இருந்த கொலை வழக்கு பிரிவனை ரத்து செய்தனர். மேலும் இது தொடர்பாக புதிய துணை குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

    English summary
    the Jharkhand Police’s decision to drop the murder charge against 13 men accused of lynching Tabrez Ansari
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X