For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடேங்கப்பா.. ஹேமந்த் சோரன் அதிரடி.. தனியார் நிறுவனங்களில் 75% பணியிடங்கள் மாநில மக்களுக்கு மட்டுமே

Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அதிரடியாக ஒரு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். அடுத்தடுத்த சில அறிவிப்புகள் அந்த மாநில மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவதாகவும் உள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் செயல்படும் தனியார் நிறுவனங்களில் 75% பணியிடங்கள் அந்த மாநில மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் கொள்கை சட்டம் கொண்டுவரப் போவதாக ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு முழுக்க முழுக்க பணியிட நியமனத்திற்கான ஆண்டாக மாறப் போகிறது என்றும் அவர் மகிழ்ச்சி தகவல் ஒன்றை மாநில மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் வேலை

தனியார் நிறுவனங்களில் வேலை

சமீபத்தில் நிறைவடைந்த குடியரசு தின விழாவின் போது ஹேமந்த் சோரன் இவ்வாறு பேசியதாக அந்த மாநில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. உள் மாநில மக்களுக்கு 75 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது.. அதுவும் தனியார் வேலை வாய்ப்புகளில் வழங்குவது என்பது மிக முக்கியமான கொள்கை முடிவு என்று கூறப்படுகிறது.

முதியோர் ஓய்வூதியம்

முதியோர் ஓய்வூதியம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள முதியவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தையும் துவங்கி வைக்கப் போவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தும்கா நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் 500 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வேட்டி, சேலை, லுங்கி

வேட்டி, சேலை, லுங்கி

அது மட்டும் கிடையாது.. தமிழகம் பாணியில் மற்றொரு அதிரடி அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆண்களுக்கு வேட்டி அல்லது லுங்கி, பெண்களுக்கு சேலை ஆகியவை அரசு மூலம் வழங்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. 57 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு 10 ரூபாய் விலையில் இவை வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடி

விவசாய கடன் தள்ளுபடி

இன்னொரு மகிழ்ச்சி செய்தி என்னவென்றால், 50 ஆயிரம் ரூபாய்க்கு கீழே விவசாய கடன் பெற்ற விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். ஏற்கனவே அது நடைமுறைக்கு வந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் தேர்தல்

ஜார்கண்ட் தேர்தல்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது 81 தொகுதிகள் கொண்ட மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றி பெற்று ஹேமந்த் சோரன் முதலமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Jharkhand chief minister Hemant Soren announced that, his government will soon formulate a new domicile policy and reserve 75% jobs in the private sector for the people of the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X