For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜார்கண்ட் கும்பல் படுகொலை பின்னணி: திருமணம் ஆன ஒன்றை மாதத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம் இளைஞர்..

Google Oneindia Tamil News

Recommended Video

    Jharkhand men | இரவு முழுவதும் இளைஞருக்கு அடி, ஜார்க்கண்டில் கொலை- வீடியோ

    ஜாம்ஷெட்பூர்: ஊருக்குள் இருசக்கர வாகனத்தை திருட வந்ததாக கூறி 24 வயது முஸ்லிம் இளைஞரை ஒரு கும்பல் இரவு முழுவதும் அடித்து உதைத்து துன்புறுத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கொல்லப்பட்டவருக்கு திருமணம் நடந்து ஒன்றறை மாதமே ஆகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    ஜார்கண்ட் மாநிலம் சரைக்கெலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாம்ஸ் டப்ரேஸ் அன்சாரி என்ற 24 வயது இஸ்லாமிய இளைஞர், இவர் அந்த பகுதியில் உள்ள செரைகெலா என்ற ஊரை கடந்து 17ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை அந்த ஊரைச் சேர்ந்த சிலர் இருசக்கர வாகனத்தை திருட வந்ததாக குற்றம்சாட்டி கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    அதன்பிறகு இரவு முழுவதும் கொடுரமாக அடித்து உதைத்துள்ளனர். அப்போது அவர்கள் டப்ரேஸ் அன்சாரியை ஜெய் ஸ்ரீராம் சொல்லு என்று சொல்லி சொல்லி அடித்து உதைத்தாகவும் கூறப்படுகிறது. விடிய விடிய நடந்த தாக்குதலுக்கு பிறகு 18ம் தேதி காலை போலீசில் டப்ரேஸ் அன்சாரியை ஒப்படைத்தனர். போலீசார் மருத்துவனையில் முதல் உதவி சிகிச்சை அளித்துவிட்டு சிறையில் அடைத்தனர். ஆனால் அங்கு டப்ரேஸ் உடல்நிலை மோசம் அடைந்ததால் மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற டப்ரேஸ் கடந்த 22ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஒன்றரை மாதத்தில் கணவன் சாவு

    ஒன்றரை மாதத்தில் கணவன் சாவு

    டப்ரேஸ் அன்சாரியின் இறப்பு அவரது குடும்பத்தை நொறுங்கவைத்துள்ளது. திருமணம் ஆன 45 நாளில் உயிரிழந்தததால் கணவனை பிரிந்த அவரது மனைவி பரிதவிப்புடன் நிற்கிறார். அந்த பெண்ணுக்கு கணவன் இறந்த தகவலை இரண்டு நாளைக்கு பிறகே சொல்லியிருக்கிறார்கள். அவர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார்.

    வனப்பகுதியில் கொலை

    வனப்பகுதியில் கொலை

    முன்னதாக டப்ரேஸ் அன்சாரி போலவே அவரது தந்தை மக்சூர் அலாம் கடந்த 2005ம் ஆண்டு அவரது தந்தையும் காட்டுப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அப்போது டப்ரேஸ்க்கு 10 வயதும் அவரது தங்கைக்கு 8வயதும் இருந்ததாம். டப்ரேஸின் நண்பர் லுக்மண் அன்சாரி இதுபற்றி கூறுகையில், "டப்ரேஸின் தந்தை அலாம் மற்றும் அவரது இந்து நண்பர்கள் வனப்பகுதிக்கு சென்ற போது இரண்டு நாள்கள் அவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. கடைசியில் அலாம் கொல்லப்பட்டு கிடந்தார். அதற்கு காரணம் என அவருடைய நண்பர்கள் 6பேரை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு 6 மாதத்தில் அவரது நண்பர்கள் அனைவருமே அதே வனப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார்கள்.

    இந்து பெண்ணுடன் திருமணம்

    இந்து பெண்ணுடன் திருமணம்

    டப்ரேசின் மாமா, முகமது சர்தார் அலாம், டப்ரேசின் தந்தை கொலை குறித்து புகார் அளித்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வழக்கை மூடிவிட்டனர். டப்ரேஸ் தந்தையை இழந்த நிலையில் தாயை தனது 3 வயதிலேயே இழந்துவிட்டார். இவருக்கு கடந்த ஒன்றை மாதங்களுக்கு முன்பு தான் இந்து பெண் ஒருவரை திருமணம் செய்தார். அந்த பெண் இஸ்லாம் மதத்திற்கு மாறி டப்ரேஸை திருணம் செய்து கொண்டார்.

    புணேவில் வெல்டர் வேலை

    புணேவில் வெல்டர் வேலை

    தந்தை இறந்த பிறகு குடும்பத்தின் பாரத்தை 10 வயதில் இருந்தே டப்ரேஸ் தான் சுமந்து வந்தார். புணேவில் வெல்டராக வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவரை நாங்கள் சோனு என செல்லாமாக அழைப்போம். மிகவும் நல்ல பையன். இந்து நண்பர்களுடன் நல்ல நட்பில் இருந்தான். நான் அவனுடன் புணேயில் ஒன்றாக தங்கி வேலை பார்த்து வந்தேன். இப்போது நாள் என் சொந்த கிராமத்தில் கடை வைத்துள்ளேன். அவனை இழந்தது மிகவும் வேதனையாக இருக்கிறது" என்றார்.

    24 தேதி செல்வதாக இருந்தது

    24 தேதி செல்வதாக இருந்தது

    டப்ரேஸ் அன்சாரி தனது ஒன்றைறை மாத புது மனைவியுடன் புணேவில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு ரம்ஜான் விடுமுறை கொண்டாடுவதற்காக வந்துள்ளார். கடந்த 24ம் தேதி திரும்பவும் மனைவுயுடன் புணே செல்வதற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார். ஆனால் அதற்கு இப்படி ஒரு கொடூரம் நிகழ்ந்துள்ளது.

    போலீஸ் மீது நடவடிக்கை

    போலீஸ் மீது நடவடிக்கை

    இதனிடையே சரைக்கெலா மாவட்ட எஸ்பி கார்த்திக் இதுபற்றி கூறுகையில், டப்ரேஸின் மனைவி சாய்ஷா அளித்த புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படுகொலை தொடர்பாக சிறப்பு குழு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். டபேரஸ் குடும்பத்தினர் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலைகழித்ததாக எழும் புகார் குறித்து சிறப்பு குழுவின் விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    English summary
    Jharkhand Tabrez Ansari lynched and killed by mobs, his tragedy happened barely a month and a half after his marriage
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X