For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது: 3 பேர் காயம்- 4 ரயில்கள் ரத்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்து காரணமாக 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜம்முவிலிருந்து, புனோ நோக்கி சென்றுகொண்டிருந்த ஜீலம் எக்ஸ்பிரஸ், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பில்லவுர் மற்றும் லதோவல் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பயணிகள் படுகாயமடைந்த நிலையில், லுதியானாவில் உள்ள சிவில் மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Jhelum Express derail in Punjab,3 injured

ஜம்மு தாவியில் இருந்து, புனே நகரத்துக்கு செல்லும் ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மற்றும் லூதியானா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்த பொழுது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சில பயணிகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/ANI_news/status/783119914169016320?ref_src=twsrc%5Etfw

கிட்டத்தட்ட 17 பெட்டிகள் கொண்ட ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயில் 9 பெட்டிகள் சாலையின் இருபுறங்களிலும் தடம் புரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 8 பெட்டிகள் (எஸ்1. எஸ்2....எஸ்8) ஸ்லீப்பர் வகுப்பை சேர்ந்தவை என்றும் மற்ற ஒரு பெட்டி பி5 வகுப்பை சேர்ந்தது என்றும் கோட்ட ரயில்வே மேலாளர் பெரோஷ்பூர் அனுஜ் பிரகாஷ் கூறியுள்ளார். இந்த விபத்து காரணமாக 4 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

https://twitter.com/ANI_news/status/783131987267596288?ref_src=twsrc%5Etfw

ஜலந்தர் - டெல்லி மற்றும் அமிர்தசரஸ் - ஹரித்வார் செல்லும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ் - டெல்லி செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் அமிர்தசரஸ் - சண்டீகர் செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Ten coaches of the Jhelum Express derailed between Phillaur and Ladhowal at 3:05 am," Divisional Railway Manager (DRM) Ferozepur Anuj Prakash said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X